உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு

வணிக சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு

சென்னை: தமிழகத்தில், இம்மாதம்(நவம்பர்) வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
நவ 01, 2024 12:34

உடனே ஹோட்டல் உரிமையாளர்கள் தின்பண்டங்கள் விலையை ஏற்றிவிடுவார்கள். ஆனால் காஸ் விலை குறைந்தால், தின்பண்டங்கள் விலையை குறைக்கமாட்டார்கள்.


பாமரன்
நவ 01, 2024 13:21

கரீக்டு ரமேஷ்... ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் ஈயம் பூசாத மாதிரியும் இருக்கனும்... யாரை திட்டரோம்னு தெரிய கூடாது...


பாமரன்
நவ 01, 2024 11:36

அதெப்படி திமிங்கிலம்... வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் ரெண்டிலும் ஒரே கேஸ் தான் ரொப்புறாங்க... ரெண்டோட விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யுது... மத்திய அரசு கிடையாதுன்னு இங்கே சொல்லலைன்னா பகோடாஸ் வைவாங்க... ஆனாலும் வெவ்வேறு விலையை இந்த நிறுவனங்கள் வச்சிருப்பதுக்கு காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்காவாதான் இருக்கோணும்... வேணும்னா இந்த துறைக்கு ஒரு அமிச்சர் மிக்சர் சாப்டுக்கிட்டு இருப்பார் ... அவராண்ட அல்லது நம்ம பகோடாஸ் கிட்ட கேட்டுக்கலாம்...


R.RAMACHANDRAN
நவ 01, 2024 08:28

வணிக சிலிண்டர் உயர்வதால் உஜ்ஜாலா திட்டத்தின் கீழ் வழங்கும் சிலிண்டர்கள் கள்ள சந்தையில் விற்கின்றனர்.


Priyan Vadanad
நவ 01, 2024 06:36

தெய்வ பிறவி வாழ்க. கடவுள் தந்த தீபாவளி பரிசு.


Priyan Vadanad
நவ 01, 2024 06:32

தீபாவளி வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை