உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு

புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் என்னென்ன சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தலைமை வழக்கறிஞர், தலைமை செயலாளர், உள்துறை, செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதன் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உள்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து ஒரு மாதத்தில் இக்குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rajasekar Jayaraman
ஜூலை 09, 2024 15:22

இது என்ன உங்க இஷ்டத்துக்கு சவுகரித்துக்கு மாற்றுவதற்கு ஸ்டாலின் ஓட குடும்ப சொத்து இல்ல தமிழ்நாடு.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 12:00

அடுத்து அரசியல் சட்டத்திலும் மாற்றங்கள் செய்ய திமுக அரசு முயற்சித்தாலும் ஆச்சர்யமில்லை.


theruvasagan
ஜூலை 09, 2024 08:58

இஷ்டமானதை எடுத்துக் கொண்டு வேண்டாததை தள்ளுவதற்கு அதென்ன உடுப்பி ஹோட்டல் மெனுவா.


Ramesh
ஜூலை 09, 2024 06:53

நீ வெளுத்து கட்டு தெலுங்கு தலைவா. தழிழன் சந்ததிகள் முழுவதுமாக அழிக்கபட்டு தெலுங்கு நாயுடு என்று பெயர் மாற்றம் ஆகும் வரை எங்கள் ஓட்டு ஓங்கோல் தெலுகுவாடுவிற்க்கே.


சேனாபதி
ஜூலை 09, 2024 00:26

வைங்க.நல்கா குழு வைங்க. ரிடையரான ஜட்ஜுங்க நிறைய பேர் ரெடியிருக்காங்க. என்ன சட்டம் வந்தாலும் இங்கே கட்டப்பஞ்சாயத்துதானே அமலில்.இருக்கு?


R.MURALIKRISHNAN
ஜூலை 08, 2024 22:25

குழு அமைத்து 40% கமிஷன் அடிப்பது எப்படி என்றும் குழு அமைப்பார்


இராம தாசன்
ஜூலை 08, 2024 21:55

இவர் இவ்வளவு பதறுவதை பார்த்தால் இந்த சட்டம் நிச்சயம் பொது மக்களுக்கு மிகவும் நல்லதாகத்தான் இருக்கும்


தமிழ்வேள்
ஜூலை 08, 2024 21:09

அண்ணா சட்டம் கருணா சட்டம் என பெயர் வைக்க போகிறாரா? அல்லது திமுக கும்பல் பரிசுத்த ஆவியின் கும்பல் என்ன தவறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அவை குற்றம் அல்ல விருது வழங்கலாம் என்று சட்டவிதிகளை உருவாக்க போகிறாரா?


konanki
ஜூலை 08, 2024 20:55

10 பைசாக்கு பிரயோஜனம் இல்லை இந்த குழுவால். வரிப் பணம் தண்ட செலவு


konanki
ஜூலை 08, 2024 20:54

வெட்டி செலவு. மாச சம்பளம் கார் டிரைவர் பெட்ரோல் பங்களா நம்ப வரிப்பணத்தில் தண்ட செலவு அரசியல் செய்யும் உதவாக்கரை மாநில அரசு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை