உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரியில் மூதாட்டிகள் ஆணையத்தில் புகார்

லாரியில் மூதாட்டிகள் ஆணையத்தில் புகார்

சென்னை:'திருநெல்வேலியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவுக்கு, லாரிகளில் மூதாட்டிகளை, அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்,திருநெல்வேலியில், கடந்த 7ம் தேதி நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை வரவேற்க, வயதான பெண்களை, லாரிகளில் அழைத்து வந்தததாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி அளித்த புகாரில், 'முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, வயதான பெண்களை லாரிகளில் அழைத்து வந்தது மனித உரிமை மீறல். எனவே, லாரிகளில் அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ