நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி
சென்னை:உணவு துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, மழையில் இருந்து பாதுகாப்பாக வைக்க, பாலித்தீன் தார்பாய்கள் மற்றும் பொருட்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். துறை அதிகாரிகள், அவர்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் மற்றும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். நெல்லுக்கான தொகையை விவசாயிகள் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க வேண்டும்இவ்வாறு கூறினார்.