மேலும் செய்திகள்
ரூ.25,000 கோடிக்கு அதானி உரிமை பங்கு
26-Nov-2025
'அ தானி என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 24,900 கோடி ரூபாய் மதிப்பிலான 'உரிமைப் பங்குகள்' வெளியீட்டுக்கு, இறுதி நாளில் முழுவதுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தகுதியான பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்று 1,800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இது, முந்தைய நாளின் சந்தை விலையைவிட, கிட்டதட்ட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும். உரிமைப் பங்குகளை பெற தகுதியான பங்குதாரர்கள், தாங்கள் வைத்திருக்கும் 25 அதானி என்டர்பிரைசஸ் பங்குகளுக்கு மூன்று புதிய பங்குகளை பெறுவர். உரிமைப் பங்குகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு பங்குதாரர்களின் டீமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-Nov-2025