உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்

 சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கருக்கு ஜாமின் வழங்குமாறு, அவரது தாய் கமலா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. வசிக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், சங்கருக்கு 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். பின், நீதிபதிகள் கூறியதாவது: ஜனநாயகத்தில் எதிர் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், நாளை யாரும் பேச முடியாது. ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்து இருந்தால், அவதுாறு வழக்கு தாக்கல் செய்யலாம் . மாறாக, தனி நபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது; அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு, பொய் வழக்கு என்றால், அதன் பின்விளைவுகளை அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி