கள் மீதான தடையை நீக்கக்கோரி மாநாடு
சென்னை:''தமிழத்தில், கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, வரும் 13, 20ம் தேதிகளில் மாநாடு நடத்த உள்ளோம்,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். அவரது பேட்டி:தமிழகத்தில் கள் இறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்க கோரி, வரும் 13ம் தேதி திருவண்ணாமலையிலும், 2-0ம் தேதி தர்மபுரியிலும், மாநாடு நடத்த உள்ளோம். கள் இறக்குவதும், பருகுவதும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படுள்ள உரிமை. தமிழகத்தில் மட்டும் இச்சட்டம் நடைமுறையில் இல்லை. மாநில அரசு கலப்படம் எனக்கூறி, கடந்த 38 ஆண்டுகளாக கள் இறக்க, விவசாயிகளுக்கு தடை விதித்திருப்பது, உரிமை மீறலாகும். அரசு கள் இறக்கும் விவசாயிகள் மீது, மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, அவர்களது உரிமத்தை ரத்து செய்வது என, பனைத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.