தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்தது
தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கை, வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. கர்நாடகா, மஹாராஷ்டிராவில் ஓட்டுத்திருட்டு தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள், இதுவரை தீர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? தேர்தல் கமிஷன் மீதான அவநம்பிக்கை, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளை அவசர கோலத்தில் மேற்கொள்ளாமல், இப்பணியை நிதானமாகவும், முழுமையாகவும், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த வேண்டும் என்பதே, எங்கள் கட்சியின் நிலைப்பாடு. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல் கிடைத்த பின், இப்பணியை முன்னெடுப்பதே சரியாக இருக்கும். - கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்