ஹால்மார்க் இல்லாத நகைகள் பறிமுதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில், பாலாஜி ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்குகிறது. இந்த நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவில், மதுரையை சேர்ந்த, இந்திய தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள், திடீரென ஆய்வு செய்தனர்.மத்திய அரசு விதிகளின்படி, ஹால்மார்க் குறியீடு இல்லாத நகைகள், கடைகளில் விற்கப்படக் கூடாது. அங்கிருந்த பல நகைகளில் ஹால்மார்க் குறியீடு இல்லாததை கண்டறிந்தனர்.அதையடுத்து, விற்பனைக்காக வைத்திருந்த, 1,643 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 1.22 கோடி ரூபாய்.