உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., மாஜி தலைவருக்கு கத்திக்குத்து

காங்., மாஜி தலைவருக்கு கத்திக்குத்து

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் காங்., தலைவர் ராஜகோபாலை மூன்று பேர் கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பியது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஈத்தாமொழி ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால் 73. முன்னாள் மாவட்ட காங்., தலைவர். வழக்கறிஞர். தற்போது பா.ஜ.,வில் உள்ளார்.நேற்று காலை ராஜகோபால் வீட்டில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து ராஜகோபாலை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். மயக்கம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப சொத்து பிரச்சினை தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ