உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., மாநாடு கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு

பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., மாநாடு கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு

திருநெல்வேலியில் செப்., 7ல் நடக்கவுள்ள, தமிழக காங்கிரஸ் மாநாட்டுக்கு வருமாறு, கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, திருநெல்வேலியில் நடந்தது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'சோனியாவுக்கு ஒரே லட்சியம், ஒரே கனவு, தன் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பது. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தன் மகன் உதயநிதியை முதலவராக்க வேண்டும். இருவரின் கனவும் பலிக்கப் போவதில்லை. பிரதமர், முதல்வர் இந்த இரண்டு பதவிகளிலும், அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்' என்றார். சமீபத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அமித் ஷா, பார்லிமென்டில் விவாதங்கள் நடக்க விடாமல், எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். எனவே, அமித் ஷாவின் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கும் பதிலடி தருவதற்கும், வாக்காளர்கள் திருட்டு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கும், தமிழக காங்கிரஸ் சார்பில், செப்., 7ம் தேதி, திருநெல்வேலியில் தன் தலைமையில், மாநில மாநாடு நடத்தப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்துள்ளார். அதில் பங்கேற்குமாறு, காங்கிரஸ் தலைவர் கார்கே, கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோருக்கு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், செப்., 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், கார்கே, பிரியங்கா இருவரும், திருநெல்வேலி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என, டில்லி காங்., வட்டாரங்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

VenuKopal, S
ஆக 27, 2025 19:08

என்னது பா ஜ க வுக்கு போட்டியா காங்.,ஆ...இது என்ன காமெடி...


R.MURALIKRISHNAN
ஆக 27, 2025 14:32

காங்கிரஸ் இன்றும் இருக்கா


கண்ணன்
ஆக 27, 2025 11:29

ஆளுக்கு ரூ. 200/-, ஒரு குவார்ட்ர் மற்றும் பிரியாணி உண்டு…..


xyzabc
ஆக 27, 2025 10:55

கார்கே தொண்டை கிழிய பேசும் ஆசாமி.


Rajan A
ஆக 27, 2025 13:33

சில சமயம் அழவும் செய்வார் - இந்த குடும்பத்திடம் சிக்கியதற்கு


Ganapathy Subramanian
ஆக 27, 2025 09:42

காங்கிரஸ் PRESIDENT என்ற பெயரோடு யார் இருந்தாலும் அவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போலத்தான் நடத்தும் என்பது நாடறிந்த ஒன்று. என்னமோ கார்கே பெரிய மனிதர் போல அந்த ஆளை கூப்பிட்டு சாணி அடித்து அசிங்கப்படுத்தப்போகிறீர்கள்.


Rajan A
ஆக 27, 2025 07:56

அவங்க இரண்டு பேரும் வந்தால் போடும் 10 சேர் நிரம்பும்.


N Sasikumar Yadhav
ஆக 27, 2025 06:34

சும்மா சும்மா இந்த மானங்கெட்ட ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க தேர்தல் கமிஷனிடம் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை கேட்காமல் சாலைகளில் நின்று உலறி கொண்டு இருக்க கூடாது


V Venkatachalam
ஆக 27, 2025 14:14

எங்களுக்கு வசதியான இடம் சாலை தான். அப்பதான் வரைமுறை இல்லாமல் பேசலாம். ஏற்கனவே கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு விட்டேன். இனிமேலும் மன்னிப்பு கேட்க முடியாது. எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும் என்பது என் கழுத்தில் நானே சுருக்கு போட்டுக்கொள்வது போலத்தானே. கொஞ்ச வருஷத்துக்கு இப்புடியே ஓட்டுவோம். பிலாவால் புட்டோ மாதிரி பிரியங்கா வின் பயல்களை ஏதாவது தேத்த முடியுமா ன்னு பாப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை