உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வியை மூடி மறைக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம் ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு

தோல்வியை மூடி மறைக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம் ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தோல்வியை மூடி மறைப்பதற்காகவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிர்த்து செயல்பட கூடிய வகையில் எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை தான் தற்போது காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.தேர்தல் ஆணையம் என்பது இந்திய மக்களுக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, நல்ல அரசை, மக்கள் விரும்பும் அரசை, மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு நடுநிலையான ஆணையம். அத்தகைய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து குற்றம் கூறி, ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் செயல்படுத்த தொடங்கினால், அதன் உள்ளர்த்தம் நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலில் தெரியும். காங்கிரஸ் கூட்டணி மிக மிக பலவீனமாக உள்ளது. தோல்வியை அவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள். அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகமாக இது நடக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றம் சாட்ட விரும்புகிறேன். இதனை சாதாரண வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ems
ஆக 17, 2025 22:21

Vaa


மனிதன்
ஆக 17, 2025 21:27

வாசனைதானே சொல்லுறீங்க?? உண்மைதான் வாங்குன காசுக்குமேல கூவுவார்.


Narayanan Muthu
ஆக 17, 2025 21:15

மூப்பனாரின் பெயருக்குத்தான் களங்கம்.


Abdul Rahim
ஆக 17, 2025 20:39

மத்திய கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக சங்கிகள் உங்கள் மீது போட்ட வழக்கு என்ன ஆச்சு ....


Abdul Rahim
ஆக 17, 2025 20:36

காங்கிரசின் பெயரைக்கூட உச்சரிக்க உமக்கு தகுதி இல்லை ஒரு ராஜ்ஜியசபா சீட்டுக்காக சோரம் போனவரெல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது , 10 வருடம் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா எம்பியாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கி பெருமை சேர்த்து தந்த கட்சியையே காட்டிக்கொடுத்த துரோகி இன்று செஞ்சோற்று கடனுக்காக இப்படி பேசுகிறது .


என்றும் இந்தியன்
ஆக 17, 2025 20:28

தோல்வியை மூடி மறைப்பதற்காகவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடகம் - வாசன். இது 1000% சரியான வார்த்தை இது தான் உண்மை


ManiMurugan Murugan
ஆக 17, 2025 18:58

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணியின் பித்தலாட்டம் வெளியில் தெரிந்து விட்டது என்ற ஆதங்கம் பெயர் நீக்கம் செய்யப் பட்டவர்கள் அவர்கள் உண்மையான ஆவனங்களை கொடுத்து பதிவு செய்ய தேர்தல் ஆணையம் காலம் கொடுத்த பிறகும் யாரும் வரவில்லை இந்த பித்தலாட்டக் கூட்டணி என்ன செய்வது என்று தெரியாமல் திரை கதை வசன நாடகம்.


Saai Sundharamurthy AVK
ஆக 17, 2025 18:42

வாசன் சொல்வது முற்றிலும் உண்மை. எப்படியும் தங்கள் கட்சி தோற்றுத் தான் போகப் போகிறது என்று காங்கிரசுக்கு நன்றாக தெரிந்து விட்டது. ஆகவே ராகுல்காந்தி இப்போதிலிருந்தே தேர்தல் ஆணையம் மீது ஒரு பழியை போட்டு வைப்போம் என்று அராஜகமாக குற்றம் சுமதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வெளிநாட்டு கைக்கூலி. இந்தியரே அல்ல. தேசத்துரோகி. அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.


T.sthivinayagam
ஆக 17, 2025 18:07

மைனாரிட்டி அரசுக்கு இவ்வளவு பெரிய சப்போட்டா


vivek
ஆக 17, 2025 18:54

வாங்குன காசுக்கு நீங்க பொங்குங்க


Keshavan.J
ஆக 17, 2025 19:57

கட்டுமரம் கூட மைனாரிட்டி அரசு நடத்தினார். உமக்கு தெரியலையா கொத்தடிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை