உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்றை திரும்பி பார்ப்போம்: எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் செய்த அர்ச்சனை

வரலாற்றை திரும்பி பார்ப்போம்: எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் செய்த அர்ச்சனை

உடல்நலம் குன்றிய எம்ஜிஆர், அமெரிக்க நாட்டின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டம். 'அவருக்கு அளிக்கின்ற மருத்துவச் சிகிச்சைகள் பலன் அளிக்க வேண்டும்' என்று தமிழக மக்கள் ஒன்று திரண்டு, விழித்துளிகள் உருண்டு, ஏகோபித்த குரலில் வேண்டுதல்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். மறுநாள் எம்ஜிஆருக்கு அறுவை சிகிச்சை எனக் குறிக்கப்பட்டிருந்த சூழலில், காஞ்சிபுரம் பரபரப்பாக புழங்கியது. காஞ்சி பரமாச்சாரியார் நேரே காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அம்மன் சிலையின் அருகில் அமர்ந்தார். அம்மனுக்கு 108 பால்குடங்கள் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தார். அங்கேயே அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7qygwkv2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'எம்ஜிஆர் குணமாகி வெளிவந்திட அருள் புரிய வேண்டும்' என்று பரமாச்சாரியார் மிகுந்த உருக்க உணர்வோடு தன் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை அரங்கேற்றினார். எம்ஜிஆர் குணமானார். சென்னை திரும்பினார். அப்போது அவரை அடிக்கடிச் சந்தித்து கொண்டு இருந்தவர்களில் பத்திரிகையாளர் மணியனும் ஒருவர். இத்தகைய ஒரு சந்திப்பின்போது பரமாச்சாரியாரின் இந்த பாலாபிஷேகம் பற்றி எம்ஜிஆரிடம் விவரித்துவிட்டார். அதனைக் கேட்ட எம்ஜிஆர் நெகிழ்ந்து போனார். ஒரு நாள் சட்டசபைக்குக் கிளம்பினார். அப்போது திடீரென்று, காரை காஞ்சிபுரத்துக்குத் திருப்பச் சொன்னார். நேராகப் பரமாச்சாரியாரைச் சந்தித்தார். கண்ணீர் மல்க உருகி...உருகி அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த தகவல் கருணாநிதியின் செவிகளை எட்டி விட்டது. சட்டசபையில் கருணாநிதி எழுந்தார். 'முதல்வர் புரோட்டோகால் இல்லாமல் இப்படி எல்லாம் காஞ்சி மடத்திற்குச் சென்றது சரிதானா? 'என்று அவர் வினாக் கணை தொடுத்தார். சொல்வாக்குச் சொக்கர் கருணாநிதி இவ்வாறு கேட்க, செல்வாக்குச் செல்வர் எம்ஜிஆர் பதிலடி கொடுத்தார்.

அப்போது எம்ஜிஆர் பதில் இதோ:

முஸ்லிம்கள் மசூதிக்குச் செல்கின்றனர். கிருத்தவர்கள் மாதா கோயிலுக்குப் போகிறார்கள். அது அவர்களின் மத உரிமை. அதேபோல நானும் காஞ்சிபுரம் சென்று வந்திருக்கிறேன். இது என் தனிப்பட்ட உரிமை என்றார்.ஆர் நூருல்லா, செய்தியாளன், 9655578786


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 09, 2024 00:46

அப்பவே அந்த திருட்டு ரயில் ஏறிவந்தவன் ஹிந்து எதிரியாக இருந்திருக்கான். அப்பவே ஹிந்துக்கள் அவனை அடையாளம் கண்டு ஓங்கோலுக்கு ஓட்டியிருக்கவேண்டும். தவறு இழைத்துவிட்டனர். இப்பொழுது அவன் வாரிசுகளின் கீழ் ஹிந்துக்கள் அவஸ்தை. இப்பவாவது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு அந்த ஓங்கோல் குடும்பத்தை அந்த ஊருக்கே ஓட ஓட விரட்டி அடிக்கவேண்டும்.


Velan Iyengaar
ஜன 08, 2024 21:55

மஹா பெரியவர் மீது வைத்திருக்கும் நல்ல பெயரை கெடுக்கும் வண்ணம் இந்த செய்தி இருக்கு தனிநபர்...அவர் நன்மைக்கு மடத்தை உபயோகப்படுத்திய மகா பெரியவரும் அவர் சார்ந்த அந்த அமைப்புக்கு கேடுகெட்ட பெயரை தான் ஈட்டி தந்திருக்கிறார்... அப்போ சனாதனம் அந்த மஹா பெரியவரையும் தவறிழைக்க மட்டுமே இட்டு சென்றுள்ளது இதுவரை மஹா பெரியவர் அவர் வாழ்வின் முழு நாளில் ஒரு தவறும் இழைக்காத ஒரு நபராக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது பெரும் சோகத்தை தருதுசனாதனம் இதுவரை தவறிழைக்காத ஒரு நபரையும் தரவில்லை என்பதே அப்பட்டமான உண்மை


(null)
ஜன 09, 2024 00:22

The worst creature is bluffing about Kanchi Seer and Sanathan Dharma. Oh is this your masters Missionary order?


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 00:32

அடேய் மூர்கா?


Barakat Ali
ஜன 08, 2024 21:09

ஆரூரார் அவர்களே ..... ஒரு துறவி உலக நன்மைக்காகத்தானே பிரார்த்திக்க வேண்டும் ???? தனி மனிதனுக்காக எப்படி தொழலாம் ????


Velan Iyengaar
ஜன 08, 2024 21:39

கேள்வி கேட்டால் சனாதன விரோதியாகிவிடுவான்.. ஆனால் நீர் எப்போது எப்படி வேலி தாண்டுவீர் என்பது உமக்கு கூலி கொடுப்பவர் மட்டுமே அறிந்த ரகசியம்நீர் ஒரு நபும்சகன்.... உம்மை நம்புவது கடினம்


Velan Iyengaar
ஜன 08, 2024 21:59

அப்போ சனாதனம் எந்த மானுட உறுபடியையும் விட்டு வைக்கவில்லை... காஞ்சி மஹா பெரியவர் உட்பட அப்போ .... சனாதன அதே குட்டை... அதே மட்டை வகையறா தான் அடப்பாவிகளா இத வெச்சி இதை நூறாண்டுமக்களைஎப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கீங்க உங்க பிற்கால சந்ததி வகையறா எதுவுமே உறுபடவே உருப்படாது


ஆரூர் ரங்
ஜன 08, 2024 22:16

எம்ஜியார் குணம் பெற்றால் நாட்டுக்கே நல்லது செய்வார் என்று எண்ணி செய்திருப்பார்.


Velan Iyengaar
ஜன 08, 2024 21:02

இதெல்லாம் அந்த மகா பெரியவர் செயல்.. அதுக்கு அப்புறம் வந்ததெல்லாம்.... less said better வகையறா புழல் வாசம் கொடுப்பினை பெற்ற அதி அற்புத வகையறா


ஆரூர் ரங்
ஜன 08, 2024 18:49

அப்போ டூப் மாஸ்டர் கட்டுமரம் எம்ஜிஆரது உடலை அமெரிக்க ஆஸ்பத்திரி ஐஸ்பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று மூலப்பத்திர இதழில் எழுதியது மறக்காது. திருட்டு மு.க பொய் மழை இன்னும் தொடர்கிறது.


அப்புசாமி
ஜன 08, 2024 17:31

எம்.ஜி.ஆர் 1984 ல் கிட்னி failure ஆல் பாதிக்கப்பட்டவர். அமெரிக்காவிற்கு சென்ற ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார். இந்தியா திரும்பிய பிறகும் முழுதும் குணமடையவில்லை. பிறகு உறக்கும் வரை அமெரிக்காவுக்கு சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டே இருந்தாரு. அப்போது டயாலிசிஸ் மிஷின் இங்கே இல்லை. மொத்தத்தில் குணமடையவே இல்லை


ஆரூர் ரங்
ஜன 08, 2024 18:45

கிட்னியையே மாற்றிவிட்ட பிறகு டயாலிசிஸ்? கேட்கவே புது கற்பனையா???? இருக்கு.


Ramasamy
ஜன 08, 2024 17:17

It so happened when Parmachariyar called MGR to Kanchi. MGR met him in hut near by Kanchi. Swamiji requested MGR to allot land for erection of Arupadi Veedu in Chennai. Then MGR told swamiji that u can convey through some body and I will do. Bot swamili told I also want to meet you in person like a ordinary perople. Then he allotted a land at Besant Nagar for Arupadi veedu. Swamijis responded to that by parying chandramoliswwer in Madam for good health of MGR. This is the stroy


Raja Vardhini
ஜன 08, 2024 16:43

மனித நேயன் எம்ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நேயர் காஞ்சி பெரியவர்.... இருவரும் போற்ற தகுந்தவர்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை