உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பு தின கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அரசியலமைப்பு தின கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், போட்டிகள் நடத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்களாட்சி தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு உன்னத உருவாக்கம் அம்பேத்கர் வடிவமைத்து தந்த அரசியலமைப்பு சட்டம் ஆகும்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 26 காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து துறைகளிலும், ஐகோர்ட், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியல் அமைப்பு நெறிமுறைகள் பற்றி பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடிவினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
நவ 24, 2024 17:08

பாரத 75 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு நாள் கொண்டாட்டம் தேசிய கண்ணோட்டத்துடன் கொண்டாட வேண்டியது அவசியம். முதல்வர் உத்தரவு தேசிய உணர்விர்க்கு ஒரு பலம் கூடும்


Sainathan Veeraraghavan
நவ 24, 2024 16:51

அரசியல் அமைப்பு என்றல் என்ன . குடியரசு தினம் என்று சொல்லக்கூடாதா


manokaransubbia coimbatore
நவ 24, 2024 16:50

அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை கிழித்து எரிந்து 1975இல் உள்ளே போட்டு சவட்டியது மறந்து விட்டதா விடியலாரே. அந்த கட்சியுடந்தான் சேர்ந்து கொண்டு அரசியல் அமைப்பை காக்க போறீராக்கும். நல்ல கோமாளி நாடகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை