வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புயல் நகரவில்லை என்றால் விட்டு விடுங்கள் புயலை தொல்லை செய்யாதீர்கள்
சென்னை: 'வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. 'பெங்கல்' புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது 'பெங்கல்' புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yeb0bgun&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. அடுத்த, 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. புயலாக மாறிய பின் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். 'பெங்கல்' புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ., வேகம் வரை காற்று வீசலாம்.ஆரஞ்ச் அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (நவ.,28) கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை!
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் நகரவில்லை என்றால் விட்டு விடுங்கள் புயலை தொல்லை செய்யாதீர்கள்