உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருக்குறளை ஒழுங்காக படிக்காததால் சர்ச்சை

திருக்குறளை ஒழுங்காக படிக்காததால் சர்ச்சை

கோவை:கோவையில் பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் படம் வரையப்பட்டது. பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதைத்தான் பா.ஜ., எடுத்து பயன்படுத்துகிறது.திருவள்ளுவர் சமய சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது. அது தி.மு.வினருக்கு தெரியவில்லை. திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்காததால், இப்படி சர்ச்சை கிளம்புகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அது தெரியாமல் ஜல்லிக்கட்டு குறித்து கம்யூனிஸ்ட்கள் ஏதேதோ பேசுகின்றனர். சாமி கும்பிடாமல் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடுவதில்லை.கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி