உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் சமபந்தி விருந்து பெயரில் மாநகராட்சி துணையுடன் மதமாற்றமா?

திருப்பூரில் சமபந்தி விருந்து பெயரில் மாநகராட்சி துணையுடன் மதமாற்றமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:'இயேசுவின் சமாதானம்' என்ற பெயரில் திருப்பூர் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சி, 16ம் தேதி தெற்கு ரோட்டரி கிளப் அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சி மதம் மாற்றும் நோக்குடன் நடந்துள்ளது.கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் நோக்குடன், அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகள், துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிர்ச்சியடைந்த துாய்மை பணியாளர் கேள்வி எழுப்பியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், இந்நிகழ்ச்சியை எப்படி அனுமதித்தது என்று விளக்க வேண்டும்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில், பெஞ்சமின் என்பவர் தலைமையில் சிலர், கடந்த வாரம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, போலீசிடம் சிக்கியுள்ளனர். பின், மன்னிப்பு கேட்டுள்ளனர். இவர்கள் தான் திருப்பூரில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.மேயர் தினேஷ்குமார், 57வது வார்டு கவுன்சிலர் கவிதா உட்பட, தி.மு.க., பிரமுகர்கள் பங்கேற்றுள்ளதால், அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க.,வினர், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு, சமபந்தி விருந்து நடத்துவதில்லை. ஆனால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவது போல சம்பந்தமே இல்லாமல், சமபந்தி விருந்து நடத்தியது ஏன்?தன்னார்வ அமைப்புகளை இவ்வாறு அனுமதித்தால், அரசு அலுவலகங்கள் ஜெபக்கூடங்களாக மாறிவிடும். மதம் மாற்றும் நோக்குடன், சமபந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியவர்கள் மற்றும் கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

உண்மை இல்லை!

சமூகநல அமைப்பினர், அனைத்து மாநகராட்சி பகுதியிலும், 'சமபந்தி விருந்து' நடத்தி வருவதாகவும், திருப்பூர் துாய்மை பணியாளர் சேவையை பாராட்டி, விருந்து அளிப்பதாகவும் அனுமதி கேட்டனர். துாய்மைப் பணியாளர்களின் சேவைப் பாராட்டித்தானே நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கின்றனர் என்ற பொதுப் பார்வையில், நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினோம். இந்நிகழ்ச்சியின் இறுதியில் நானும் கலந்து கொண்டேன்.ஆனால், நிகழ்ச்சிக்கு இப்போது மதச் சாயம் பூசி, உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. இருந்தாலும், என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்தேன். இதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளில், மதமாற்றம் எதுவும் வலியுறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்கள் விசிட்டிங் கார்டை மட்டுமே வழங்கியுள்ளனர். இதை வைத்துத்தான், மத மாற்ற முயற்சி நடப்பதாக ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டுகிறது. அதில் உண்மையில்லை.-- தினேஷ்குமார்மேயர், திருப்பூர் மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sivagiri
நவ 19, 2024 11:52

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் பெரும்பான்மையாக தெலுங்கர்கள். தீவிர பெருமாள் பக்தர்கள், மதம் மாற்றுவது கஷ்டம், ஆனால் சோறு போட்டால் பொதுவாக இந்தியர்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற கலாசாரம் கொண்டிருப்பதனால் சோறு போட்டால் சொன்னதை கேட்பார்கள் என்று, கன்வெர்ட்டிஸ்டுகள் இப்போது, ஹிந்து பழக்கவழக்கங்களை அப்டியே எடுத்துக்கொண்டு மதமாற்ற வேலைகளில் இறங்கி விட்டார்கள் . . .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 10:54

பெரியதத்தி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லாமலேயே கர்த்தர் காப்பாற்றினால் நானும் என் சொந்த மதத்தை உதறிவிட்டு மதம் மாறுவேன் ......


Barakat Ali
நவ 18, 2024 10:44

இந்தியாவுல நைச்சியமா பேசி மதம் மாத்துற ஊழியக்காரவுக சிரியாவுக்கு போயி முயற்சி பண்ணலாம் .......


Ramalingam Shanmugam
நவ 18, 2024 09:58

இதே வேலையா போச்சு விசிட்டிங் கார்டு எதுக்கு கொடுத்த


Barakat Ali
நவ 18, 2024 09:33

மொதல்ல துளசி கப்பார்ட் ஐ மதம் மாத்த சொல்லுங்க ....


AMLA ASOKAN
நவ 18, 2024 08:49

ஒருவர் மதம் மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா ? தன் குடும்பத்தினரை, தன் உறவினர்களை, தன் நண்பர்களை , என அனைவரின் கண்டனத்துக்கும் ஆளாக வேண்டும் . அரசு கெசட்டில் மாற்றம் செய்ய வேண்டும் . ஒரு சமபந்தி விருந்து சாப்பாடு போட்டு அல்லது துட்டு கொடுத்து ஒருவரை மதம் மாற்றம் செய்ய முடியும் என்பது அபத்தம். எதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்று விட்டதை போல் இதை பெரிதாக்குவது ஒரு மதத்தின் மீது வெறுப்பை உன்டாக்கும். சுயமாக ஒருவன் ஒரு மதத்திலிருந்து வேறு ஒரு மதத்திற்கு மாறுவதை அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது. அது அவன் சுய விருப்பம் . உலகமெங்கும் இது நடைபெறுகிறது .


Sudarsan Ragavendran
நவ 18, 2024 09:24

கண்டிப்பாக ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் மாறினால் அவரின் விருப்பம். ஆனால் பொது இடத்திற்கு சென்று விரும்பாதவர்களிடம் உங்களை பற்றி பெருமையாக கூறுவதும் அவரின் நம்பிக்கைகளை எள்ளி நகைப்பதும் மற்ற கடவுள்களை சாத்தன் என்று கூறி இங்கு வாருங்கள் கூறுவதும் தவறுதான்.


rasaa
நவ 18, 2024 09:29

நீங்கள் மதம்மாறி எவ்வளவு காலமாகின்றது


Barakat Ali
நவ 18, 2024 10:42

சுரனையற்ற திராவிட எச்சமே.... பிரச்சாரத்தாலோ, ஆசை காட்டுவதாலோவன்றி ஒருவர் தானே மதம் மாறுவதைத் தடை செய்வதில்லை இந்திய அரசியல் சட்டம் ....... அதுதான் மத உரிமை ..... ஆசைகாட்டி, இகழ்ந்துரைத்து பிரச்சாரம் செய்வதை மதத்தின்பால் ஈர்ப்புள்ள எவரும் எதிர்க்கவே செய்வர்.. சோற்றுக்காக மதம் மாறியவர்கள் எதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்று விட்டதை போல் என்றுதான் எழுதுவர் .......


சந்திரன்,போத்தனூர்
நவ 18, 2024 18:12

ஆமா நீ எப்படி அப்பத்துக்கா அரிசி மூட்டைக்கா?


James Mani
நவ 18, 2024 18:34

ட்ரு ?


Palanisamy T
நவ 18, 2024 08:22

இதே நிகழ்ச்சியை ஹிந்துமுன்னணி அமைப்பினர் நடத்த முன்வந்திருந்தால் மாநகராட்சியினர் அனுமதி வழங்கி யிருப்பார்களா? நிகழ்ச்சி நடந்தது முக்கிய கருவாக "இயேசுவின் சமாதானம்" என்ற பெயரில். ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இன்றைய முதல்வரின் பெயரே தமிழ்ப் பெயராகயில்லை. அவர் தமிழரா என்ற கேள்வி மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அவர் கட்சித் தலைவர்களின் ஹிந்துமத விரோதப் போக்கும் ஆதிக்கமும் இப்போது கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக தமிழகத்தை ஆளுவதில் உடனப்பாடில்லை. இந்து முன்னணி அமைப்பினர் தமிழகத்தில் இல்லை யென்றால் நாளை தமிழகமே மதமாற்றம் செய்யப்பட்ட மண்ணாகவும் மாறலாம். தமிழகத்திற்கு இப்போது திராவிடக் கட்சிகள் வேண்டும். குடும்ப கட்சியாக வுள்ள திமுக வை மாற்றி தமிழர் ஆதிக்கம் பெற்றக் கட்சியாக மக்கள் மாற்ற வேண்டும். அதுதான் நாளைய தமிழகத்திற்கு நல்லது. காமராசர், பக்தவத்சலம் அறிஞர் அண்ணா எடப்பாடி பழனிசாமி இவர்களெல்லாம் தமிழர்கள் தானே. முதலமைச்சர் கருணாநிதி அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். திருவள்ளுவர் யாரென்று நமக்கு தெரியாத நிலையில் அவருக்கு முதலில் அடையாளம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அடுத்து பெருமை வாய்ந்த முக்கடல் சந்திக்கும் கன்யாகுமரியில் சிலையமைத்து உலகிற்கு அடையாளம் காட்டியவர் கருணாநிதி அவர்கள். நீண்ட கால கனவான தமிழுக்கு செம்மொழி என்ற பெருமை அவர் காலத்தில்தான் கிடைத்தது. அந்த அளவிற்கு கருணாநிதி அவர்களிடம் நாம் நன்றிச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். நன்றி


Duruvesan
நவ 18, 2024 07:21

கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க


rama adhavan
நவ 18, 2024 07:13

நிகழ்ச்சியின் மொத்த வீடியோவையும் வெளியிடட்டும். நாமும் உண்மையை தெரிந்து கொள்வோம்.


R.RAMACHANDRAN
நவ 18, 2024 07:06

அரசாங்கம் செலவில் கோயில் கட்ட வேண்டும், விழா நடத்த வேண்டும், சமபந்தி விருந்து வைக்க வேண்டும் பொது இடங்களில் மற்றும் சாலை போக்குவரத்திற்கான நிலங்களில் கோயில் கட்ட வேண்டும் ஆனால் அதிலெல்லாம் சமத்துவம் கடை பிடிக்கக் கூடாது தாழ்த்தப்பட்டவர்களை தொலைவில் நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்து மதத்தின் கொள்கைகளாக இருக்கிறது.


Palanisamy T
நவ 18, 2024 08:57

தாழ்த்தப் பட்டவர்களை தொலைவில் நிறுத்தவேண்டுமென்பது இந்து மதத்தின் கொள்கையில்லை. அப்படிப் பார்த்தால் உலகில் எங்கும் வாழும் ஹிந்துக்கள் இதை கடைப்பிடிக்கவில்லையே. இந்த உயர்வு தாழ்வு இவற்றிற்கு அடிப்படையே உயர் சாதி தாழ்ந்த சாதி அடுத்து தீண்டாமைப் என்ற அடையாளமும் பிரிவினையும் தான். இந்துமதத்தின் நல்ல பெயரை சிதைப்பதே இந்த இரண்டு கேடு நிறைந்த அடையாளங்கள். இதை கடைப் பிடிப்பதே தங்களை வேண்டுமென்றே உயர்சாதி என்று அடையாளப் படுத்தும் தீயஎண்ணங்கள் கொண்ட இந்துக்கள் மட்டும்தான். ஆனால் இவர்கள் சோரம் போகும்பொதுமட்டும் இதையெல்லாம் பார்க்கின்றார்களா? இந்தியாவில் இருக்கின்றவரை இந்த சாதிகள் தீண்டாமைகள் வேண்டும். அடுத்த ஊருக்கு போகும்போது அங்கு சாதியை கொண்டுச் செல்வதில்லை. என்ன வெளி வேசமடா இது நாளடைவில் வளரும் வளர்ச்சியான இந்திய மண்ணில் இந்த அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துப் போகுமென நம்புவோம். நடக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை