உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 ஆண்டாக தேடப்படும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

25 ஆண்டாக தேடப்படும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 25 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியின் திருநெல்வேலி வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் ஒட்டினர்.திருநெல்வேலி மேலப்பாளையம் இப்ராஹிம் சாஹிப் தைக்கா தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா மகன் முகமது அலி (எ) மன்சூர் 45. இவர் தனது 19 வயதில் 1999ல் சென்னை, திருச்சி, கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்ளது.

கடந்த 25 ஆண்டாக தலைமறைவாக உள்ளார். எனவே மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், பஸ்ஸ்டாண்ட், அவரது வீடு உள்ளிட்ட 5 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்மன் ஒட்டினர்.அதில் வழக்கு தொடர்பாக மே 30 காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் தலைமறைவாக உள்ள முகமது அலி விளம்பரப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என நீதித்துறை நடுவர் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 30, 2025 14:24

ஏதாவது அரசு அலுவலகத்தில் அரசு சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டு ஜாலியாக இருப்பார் அல்லது கோரோணாவில் இறந்து விட்டார் என்று சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தாலும் வைத்திருப்பார்.


Barakat Ali
ஏப் 30, 2025 11:11

கிடைச்சாலும் இன்னும் ஒரு 25 வருசத்துக்கு ஜாமீன் கொடுத்து கோர்ட்டார் உதவுவார்களோ ????


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 09:09

முகமது என்ற குற்றவாளிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழக அரசின் அதிகாரிகள் போஸ்டர் ஒட்டி விடியலை தேடுகின்றனர்


Gnana Subramani
ஏப் 30, 2025 08:55

இன்னும் அவனை தேடும் ஐடியா இல்லை. அவனா வந்தால் புடிச்சு போட்டோ எடுத்துக்கலாம்


Sri Sri
ஏப் 30, 2025 07:14

இதுல நோட்டீஸ் ஒட்டுறத பெருமையா காமிச்சு போட்டோ.


வாய்மையே வெல்லும்
ஏப் 30, 2025 06:52

எல்லா மசூதியில் தேடுங்க கண்டிப்பா இவனுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் அல்லக்கைகள் இருக்கும். இவங்க குட்டிச்சுவர் போகறதும் இல்லாம நம்ம குடியையும் கெடுப்பானுங்க. கேடுகெட்ட கிராக்கிகள். குண்டு வைக்கும் கலாச்சாரம் ஒழியனும் அதுக்கு முதலில் திருட்டு சஹீபுக்களை பெண்டு எடுத்தாதான் முடியும் .


Svs Yaadum oore
ஏப் 30, 2025 06:44

25 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியாம். இன்னும் அடுத்து 50 வருஷத்துக்கு போஸ்டர் ஒட்டி தேடுங்க.இப்படி போஸ்டர் ஒட்ட இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிம்பளம் பென்ஷன் ....


அப்பாவி
ஏப் 30, 2025 06:39

தயவுசெஞ்சு சரணடைஞ்சு புண்ணியத்தைக் கட்டிக்கோய்யா...


pmsamy
ஏப் 30, 2025 06:33

போலீஸ் அசிங்கமா இல்ல உனக்கு இந்த மாதிரி ஒரு போஸ்டர் ஓட்ட


Sri Sri
ஏப் 30, 2025 07:13

இதுல நோட்டீஸ் ஒடடுறத பெருமையா காமிச்சு போட்டோ. அவமானம் இல்லையா


Venkatesan Srinivasan
ஏப் 30, 2025 10:51

நல்ல வேளை உத்திரப்பிரதேசமாக இருந்திருந்தால் போஸ்டர் ஒட்ட வீடு இருந்திருக்காது. நம் அதிகாரிகள் இந்த விஷயத்தில் புத்திசாலிகள். முடிந்தால் அரசு செலவில் பராமரிப்பு செய்து பாதுகாத்தும் வைக்க ஏற்பாடு செய்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை