உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை முன்னேற்பாடுகளுக்கு மாநகராட்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு

சட்டசபை முன்னேற்பாடுகளுக்கு மாநகராட்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு

பகர்கஞ்ச்:டில்லி சட்டசபை முன்னேற்பாடுகளுக்கு ரூ.25.35 கோடி வழங்க மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.டில்லி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று மேயர் மகேஷ்குமார் கிஞ்சி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கு 25.35 கோடி ரூபாய் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி ஒதுக்கிய நிதியில், ஓட்டுச்சாவடிகள் அமைப்பது, முறையான மின்சாரம் மற்றும் விளக்கு வசதிகளை உறுதி செய்தல், நகரம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறைகள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படும்.தன் அதிகார எல்லைக்குள் 2,538 இடங்களில் தோராயமாக 13,033 ஓட்டுச் சாவடிகளை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ளும்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா 19,450 ரூபாய் வீதம் என கணக்கிட்டு, 25.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை