உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: முழு பூசணியை சோற்றில் மறைப்பதா?

இது உங்கள் இடம்: முழு பூசணியை சோற்றில் மறைப்பதா?

எஸ். மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ராமர் கோவில் திறப்பு நாளில், கோவில்களில் அன்னதானம் வழங்கவும், கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தடை விதித்து, தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது; இது, நுாற்றுக்கு நுாறு உண்மை.ஆனால், 'அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட, 'தினமலர்' நாளிதழ் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.சாதாரணமாக காவல் நிலையங்களில், புகார் கொடுக்க வருவோர் மீதே வழக்கு பதிந்து, குற்றவாளியாக்கும் முயற்சி நடைபெறும். அந்த வேலையை, தற்போது தமிழக அரசே மேற்கொண்டு அச்சுறுத்துகிறது.குரங்குகளிடம் ஒரு பழக்கம் உண்டு... குரங்கின் முன் சூடான சாதத்தை தட்டில் வைத்தால், தாய் குரங்கு உடனே கை வைக்காமல், மடியில் இருக்கும் குட்டியின் கையை நைஸாக எடுத்து, சூடான சோற்றின் உள்ளே திணிக்கும். சூடு தாங்காமல், குரங்கு குட்டி கத்தும் போது, 'ஆஹா... சோறு சூடாக உள்ளது. அதில் நாம் கை வைத்து சூடு பட்டு விடக்கூடாது' என்று தீர்மானிக்கும்.அதுபோல, அயோத்தியில் நடந்த ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டைக்கு, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் நேரடியாக அரசே அனுமதி மறுத்தால், ஹிந்துக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.அதனால், வாய்மொழியாக உத்தரவிட்டு அது, 'வொர்க் அவுட்' ஆனால் ஹிந்துக்கள் அடிபணிந்து பயந்து நடுங்கி விட்டனர் என்று, காலரை துாக்கி விட்டு கொள்ளலாம் என்ற கோணத்தில், ஒரு வாய்மொழி தடை உத்தரவை பிறப்பித்து, நுால் விட்டுப் பார்த்து இருக்கிறது. ஆனால் அதை, 'தினமலர்' நாளிதழ் செய்தியாக்கி, மக்களும் கொதித்து எழுந்ததால், தற்போது வழக்கு மிரட்டல் விடுத்துள்ளது.ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகம் முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதி கோரி, ஹிந்து அமைப்புகள் கொடுத்த கடிதங்களுக்கு, பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரிகள், தமிழகத்தில் தானே பணிபுரிகின்றனர். அவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த மறுப்பு கடிதங்கள் தான் ஆதாரங்களாக இருக்கிறதே...அதன்பின்னரும், 'நாங்கள் அப்படி எந்த தடையும் பிறப்பிக்கவில்லை' என, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பசப்புவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramasamy
ஜன 25, 2024 16:30

Dear readers Wish to remind you the vandalism on Thirumurga Variayar Swamigal By DMK. So it is not new to them


duruvasar
ஜன 25, 2024 13:52

75 ஆண்டுகால திமுக வரலாற்றை அறிந்தவர்களுக்கு இந்த மாதிரியான திமுக அரசு தரப்பு மிரட்டல் வியப்பை ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.


சேஷாத்ரி,பட்டமங்கலம்
ஜன 25, 2024 11:27

இந்து மதத்தின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட எந்த அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை என்றுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது அப்படி இருக்கும் போது இந்து கோவில்களின் பூஜைகளுக்கு தடை விதித்த திமுக அரசின் உத்தரவை தினமலர் நாட்டு மக்களிடம் அம்பலப் படுத்தியதால் தினமலரின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறது இந்த விடியல் அரசு அதனால்தான் எல்லோரையும் மிரட்டுவது போல தினமலரையும் நீதிமன்றம், வழக்கு என்று பயமுறுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறது திமுக ஆனால் இப்படிப் பட்ட பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுகிற ஆளா நம் தினமலர்!????


காத்தமுத்து,சிறுமுகை
ஜன 25, 2024 11:07

தினமலர் என்ற மாபெரும் மலையோடு மோதினால் உடையப் போவது மலை அல்ல திமுகவினரின் மண்டைதான் என்பதை அராஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Ramesh Sargam
ஜன 25, 2024 09:28

ஆக மொத்தத்தில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்றால், தமிழகத்தில் இப்பொழுது ...கள் ஆட்சி புரிகின்றன என்று. சரியாக கூறினீர்கள்.


vbs manian
ஜன 25, 2024 09:16

இந்த வாய் மொழி அரசு எதனை காலம். காவல் துறை...என்ன சொல்வது.


VENKATASUBRAMANIAN
ஜன 25, 2024 08:30

உண்மையான இந்துக்கள் திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது.


Ramesh Sargam
ஜன 25, 2024 09:34

அந்த உண்மையான ஹிந்துக்களைத்தான் நான் பல காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் தேர்தலுக்கு முன்பு கிடைப்பார்கள் என நம்புகிறேன்.


GMM
ஜன 25, 2024 07:07

அரசுக்கு அவ பெயர், சட்ட பூர்வ நடவடிக்கை என்று தினமலர் போன்ற பத்திரிகையை மிரட்டுவது தவறு. நிர்வாக தவறை தினமலர் திருத்த உதவும் போது, அதனை அடக்கி தடுத்தால் கட்சி பலம் இழக்கும். ஏராளமான பத்திரிக்கைகள் TV .. நடுநிலை இல்லாமல் ஆளும்கட்சிக்கு ஆதரவு? இது தற்காலிக பலம் தரும். பத்திரிகை கிடைத்த தகவலை வெளியிடும். அதனை கொண்டு ஆளும் கட்சி திருத்தி கொள்ள முடியும்.


Kasimani Baskaran
ஜன 25, 2024 06:14

பிளேட்டையே சோற்றுக்குள் மறைத்து விடும் திறமை மாடல் அரசுக்கு உண்டு. ஏவல்த்துறையும் வெட்கமில்லாமல் அவர்களை பொதுமக்களிடம் காட்டிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஸ்காட்லாந்து போலீஸ் என்று பெயர் வாங்கியவர்கள் இன்று சொல்லவே வெட்கப்படும் அளவில் செயல்படுகிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.


NicoleThomson
ஜன 25, 2024 05:54

இப்போது செய்தது அப்படியே திரு திப்பு சுல்த்தானின் ஸ்டைலில் உள்ளது என்றால் நம்புவீர்களா? கூர்க் பகுதி மக்களை அடிபணிய வைக்க அவர்களின் பண்டிகை தினத்தன்று வாய்மொழியாக அவன் நிறுத்த சொன்னான் , அவர்கள் கேட்கவில்லை , பின்னர் பண்டிகை முடிந்ததும் அவர்கள் மீது போரிட்டு மிகப்பெரிய அழிவை உண்டாக்கினான் திப்பு சுல்தான் , அப்படி ஆகாமல் பார்த்துக்கொள்வது தமிழக இந்துக்கள் கையில் தான் உள்ளது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ