உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.சி.ஐ.டி., விசாரணை கண்துடைப்பு நாடகம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சி.பி.சி.ஐ.டி., விசாரணை கண்துடைப்பு நாடகம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சென்னை:சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை கண்துடைப்பு நாடகம் என்பதால், சி.பி.ஐ., விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, சவுக்கு சங்கர் தெரிவித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில், வாடகைக்கு வசித்து வரும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர். வீடு முழுதும் மலம் மற்றும் கழிவுநீரை கொட்டி அசுத்தப்படுத்தினர்.இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, ராயபுரம் மண்டலத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களான இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை, எழும்பூர் நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்து உள்ளது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் திருப்தி இல்லை என, சங்கர் குற்றம்சாட்டி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், ஐ.ஜி., அன்புவிடம் மனு அளிக்கச் சென்றார். அவர் அலுவலகத்தில் இல்லாததால், டி.எஸ்.பி., ஒருவரிடம் மனு அளித்தார். பின், சங்கர் அளித்த பேட்டி:என் வீடு சூறையாடப்பட்டது, மலம், கழிவுநீர் கொட்டி அராஜகம் செய்ததன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளார். இந்த தாக்குதலை அவரின் ஆதரவாளர் வாணிஸ்ரீ என்பவர், தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் திருப்தி இல்லை. சி.பி.சி.ஐ.டி., விசாரணை என்பது கண்துடைப்பு நாடகம். தாக்குதலுக்கு தலைமை தாங்கிய வாணிஸ்ரீயை ஏன் கைது செய்யவில்லை? என் வீடு சூறையாடப்பட்டதற்கு போலீசாரும் உடந்தை. அதனால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை