உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை; நா.த.க., வேட்பாளர் பேட்டி

ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை; நா.த.க., வேட்பாளர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: 'ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை' என்று நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது: நாங்கள் வாங்கிய 24,151 ஓட்டுக்கள் தி.மு.க.,வை அச்சப்படுத்தியிருக்கிறது. மக்கள் பணிகளை செய்யாவிட்டால், மக்களிடம் தி.மு.க.,வால் ஓட்டு கேட்க முடியாது. கள்ள ஓட்டு போட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியினர் டெபாசிட் வாங்கி விடுவர் என்பதால் தான் தி.மு.க.,வினர் சிக்கல் ஏற்படுத்தினர். நாம் தமிழர் கட்சியினரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பதற்றத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த சமயத்தில் அதிக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z7cns8mg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது எல்லாம் திட்டமிட்டு செய்யும் அராஜகம், கொடுங்கோல் ஆட்சிக்கு உதாரணம். தேர்தல் பணி செய்ய வந்தவர்களை கூட அவர்கள் செய்ய முடியாத வேலையை செய்ய வைத்து நெருக்கடி கொடுத்துள்ளார்கள். போலீசாருக்கு தி.மு.க., தலைமையில் இருந்து நெருக்கடி கொடுத்தார்கள். சமரசம் இல்லாத சீமானின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, எனக் கூறினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ.வெ.ராவை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை. சீமான் ஏற்கனவே சொல்லி விட்டார். நாங்கள் சொல்லும் கருத்தை சரி, தவறு என்று புரிந்து கொண்டு ஓட்டு செலுத்தினாலே, அது எங்களுக்கு பெருமை. புரிதல் இல்லாமல் ஓட்டுப்போட வேண்டாம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
பிப் 09, 2025 11:14

இவர் பெற்ற வாக்குகளில் முக்கால்வாசி திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள், மீதம் கால்வாசி ஓட்டுக்கள் தான் இவர் கட்சியின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கள்!


யுவாகுமார்
பிப் 09, 2025 10:28

வெங்காயத்தை எப்பவோ உரிச்சு முடிச்சாச்சு. இப்போ ஒண்ணுமில்லை.


ஐசக், ஈரோடு
பிப் 09, 2025 01:33

ஈவேரா குறித்த சீமான் விமர்சனம் குறைந்தது கூடுதலாக 40-45 ஆயிரம் வாக்குகளை பெற்று தந்து இருக்கும். ஆனால் முருகன் பக்தாராக காட்டிக் கொண்ட அவரது திருப்பரங்குன்றம் மலை பற்றி பேச்சு பெருமளவு அவரை நோக்கி வந்தவர்களின் முகம் சுளிக்க வைத்து விட்டது. இஸ்லாமிய கிருத்துவ வாக்குகள் எப்போதும் திராவிட சார்பு உடையது. அதை புரிந்து கொள்ள மறுத்து மேடைகளில் அவரது இஸ்லாமிய கிருத்துவ வாக்காளர்களிடம் காட்டிய அளவற்ற புகழ்ச்சி பேச்சு நடுநிலையான வாக்காளர்களை அவரிடம் இருந்து விலகி இருக்க செய்தது. திமுக மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கை வேட்டையாடும் என்பது உலகறிந்த பெருமை மிக்க திராவிட கொள்கை. இவை எல்லாம் சேர்ந்து சீமானின் ஓட்டு சதவீதத்தை குறைத்து விட்டது.


Mediagoons
பிப் 08, 2025 23:51

வீரா வேஷம் பேசிய சீமான் டெபாசிட்டு கூட பெறாமல் , அதுவும் மற்ற கட்சிகள் போட்டியிடாமல், அவர்களின் ஆசி இருந்தும் மண்ணை கவ்வியது தமிழகத்தின் வரலாறு வென்றுள்ளதைதான் காட்டுகிறது


T.sthivinayagam
பிப் 08, 2025 22:25

நீங்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள் .ஆனால் திராவிட மரபனு வாக்குகள் என்றும் சிதறாது என்பதை மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்


Bhaskaran v
பிப் 08, 2025 23:27

தில் இருந்தால் இத்தனை கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெறுங்கள்.


guna
பிப் 09, 2025 08:42

அய்யோ சிவ நாயகம்.. அப்போ உன் மரபணு உன் தாய் தந்தை கிடையாதா......நீ திராவிட மரபனுவா என்று மக்களுடன் சேர்ந்து நானும் கேட்கிறேன்


vadivelu
பிப் 08, 2025 21:52

பெரியாரை எதிர்த்ததால் இரண்டு மடங்கு வாக்குகள் கிடைத்துள்ளது. வெற்றிக்காக ஒரு கட்சியை 50 கோடிகள் செலவு செய்ய வைத்துள்ளதே .


Shankar
பிப் 08, 2025 21:48

இரண்டு பெரிய கட்சிகள் தேர்தல் களத்தில் இல்லாததே உங்களுக்கு இந்த அளவிற்கு வாக்குகள் கிடைத்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.


Ganesh
பிப் 09, 2025 00:01

இப்பொழுது புரிகிறதா திமுக எவ்வாறு பழைய தேர்தலில் வெற்றி பெற்றது என்று?


Ganesh
பிப் 09, 2025 00:02

இப்பொழுது புரிகிறதா திமுக எவ்வாறு பழைய தேர்தலில் வெற்றி பெற்றது என்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை