உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலையே தோற்றுவிடும் முதலைக்கண்ணீர்; பங்கம் செய்தார் தங்கம்!

முதலையே தோற்றுவிடும் முதலைக்கண்ணீர்; பங்கம் செய்தார் தங்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இ.பி.எஸ்., வடிக்கும் முதலைக்கண்ணீரை பார்த்தால் முதலையே தோற்றுவிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, பழனிசாமி வெளியிட்ட அறிக்கை, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.தி.மு.க., விளக்க அறிக்கையை, மொட்டை காகித அறிக்கை என்று பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து, மொட்டையாக வேட்பாளர் பட்டியல் வெளியானது.கடந்த 2007ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எனக்கு தெரியாமல், என் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் ஓட்டளிக்கச் சென்றனர்' என, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.'டான்சி' வழக்கில், ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை என, ஜெயலலிதா சொன்னதெல்லாம், அ.தி.மு.க., அடித்த மொட்டைதானே. ஏராளமான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாத்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு, நடைமுறைப்படுத்தி வருகிறது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு, அ.தி.மு.க., வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது. இதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரை பார்த்தால், முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Murugesan
நவ 13, 2024 13:01

நீங்க நாசமாக போவானுங்க தமிழகத்தை பிடித்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்கள்


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 11:35

பாஜக உள்ளே வந்துரக்கூடாது என்பதால் ஒருவரை ஒருவர் புழுதி வாரி தூற்றிக்கொண்டாலும் இனி அதனால் பயனில்லை..... உள்ளே வந்து உங்களிருவரின் தலை மீது அமர்ந்துவிட்டது .....


Mettai* Tamil
நவ 13, 2024 11:27

பரவாயில்லீங்க, நம்ம விஞ்ஞானி தலைவர் எறும்பு தின்னுடுச்சு ,கரையான் அரிச்சிடுச்சு, கூவம் ஆத்து முதலை இப்படி உயிரினங்களை வச்சு தான் கஷ்டப்பட்டு விஞ்ஞான முறையில் முன்னேறுனாரு .நீங்களும் அணில் ,குயில் ன்னு சொல்லாம , முதலை ன்னு சொல்றது நல்லா இருக்குங்க .....


Rajasekar Jayaraman
நவ 13, 2024 11:25

உங்களைவிடவா நடிக்கிறார்கள் அவர்கள் உன்மையிலேயே எத்தனுக்கு எத்தன் தான்.


குமார்
நவ 13, 2024 11:23

முதல கண்ணீர் வடித்து இருக்கிறது முதலில் நீ பார்த்தியா அப்படி முதல்ல கண்ணீர் விட்டாலும் நீலி கண்ணீர் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா சும்மா ஏதோ வாய்க்கு வந்த மாதிரி டயலாக் எல்லாம் விடக்கூடாது உங்க தலைவர் கூட தான் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்தபோது கண்ணீர் விட்டரே அது என்ன கண்ணீர் இப்ப இருக்கிறஉங்க தலைவர்கிட்ட நல்ல பேரு வாங்கணும் என்பதற்காக சும்மா ஏதோ வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது


SUBBU,
நவ 13, 2024 11:03

முதலை என்றதும் உடனே நம் ஞாபகத்துக்கு வருவது கலைஞர் கட்டுமர கருணாநிதிதான் அவரை நினைக்காமல் ஒரு நாளும் இருக்கவே முடியாது 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியின் போது கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர். சென்னையில் உள்ள கூவம் நதியை சுத்தம் செய்ய முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார் கருணாநிதி. சில மாதங்கள் கழித்து சட்டசபையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்போது இருந்தவர்கள் நேர்மையான கம்யூனிஸ்டுகள் கூவம் சுத்திகரிப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தருகிறேன் என்று கூறினார் கருணாநிதி. அடுத்த நாளே பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது கூவம் நதியில் முதலை மக்கள் அலறியடித்து ஓட்டம் என்பதுதான் அந்த செய்தி. ஒரு வாரம் கழித்து சட்டசபை கூடிய போது கருணாநிதி ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார் கூவம் நதியில் முதலை இருப்பதால் வேலை செய்யும் பணியாளர்கள் பயந்து கொண்டு தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் பாதியிலேயே கைவிடப்படுகிறது என்று அறிவித்தார். உடனே எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகள் அந்த சுத்திகரிப்பு பணிக்காக ஒதுக்கிய 3 கோடி ரூபாய் என்னாச்சு என்று கேட்டனர்? முதல் கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுவதும் செலவழிந்து விட்டதாக சொன்னார் கருணாநிதி. பிறகு தான் தெரிந்தது அந்த முதலை கோபாலபுரத்திலிருந்து ஒரு கால்வாய் வழியாக கூவத்துக்கு வந்த முதலை என்பது. முதலையின் வாய்க்குள் சென்ற பணம் திரும்பி வருமா? 1967 ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை= 100 ரூபாய் அப்படி என்றால் மூணு கோடியை இன்றைய மதிப்பில் எவ்வளவு என நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் கணக்கில் நான் கொஞ்சம் வீக்...


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 13, 2024 10:50

ஆட்சிக்கு வரும் முன்னர் நீங்கள் விட்ட கண்ணீரில் வெள்ளமே வந்து தமிழகமே தத்தளித்தது நினைவில்லையா கோப்பால்?


duruvasar
நவ 13, 2024 10:49

ஸ்டாலினுடன் போட்டிக்கு வருகிறார் என அண்ணாச்சிக்கு பொதுக்கிட்டு வருதோ .


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 10:49

என் வீட்டில் நான் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த பொழுது இது போல ஏழைகள் வீடுகளிலும் இருக்க வேண்டுமே. என்று சிந்தித்த பொழுது தோன்றியதுதான் இலவச தொலைகாட்சி திட்டம் ..... இப்படி தனது குடும்ப கேபிள் பிசினஸை வளர்த்துக்கொள்ள போட்ட திட்டத்தையே மக்கள் மீது இரக்கப்பட்டு போட்ட திட்டமாக முதலைக்கண்ணீர் வடித்தது சாட்சாத் எல்லோ டவல் தான் .....


hari
நவ 13, 2024 10:19

மோடி, அமித் ஷா பத்தி பேச உன் கொத்தடிமை கூட்டத்திற்கு தகுதியே இல்லை


சமீபத்திய செய்தி