உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதவை பெண்ணிடம் ரூ.14,000 லஞ்சம் மாஜி தாசில்தார் உட்பட மூவருக்கு சிறை கடலுார் கோர்ட் தீர்ப்பு

விதவை பெண்ணிடம் ரூ.14,000 லஞ்சம் மாஜி தாசில்தார் உட்பட மூவருக்கு சிறை கடலுார் கோர்ட் தீர்ப்பு

கடலுார்: விதவை பெண்ணுக்கு வருமான சான்றிதழ் வழங்க, 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் தாசில்தார் உட்பட 3 பேருக்கு கடலுார் கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடியை சேர்ந்தவர் மாபூஷா. இவர், கடந்த 2019ம் ஆண்டு என்.எல்.சி., நிறுவன கேண்டீனில் பணிபுரிந்தபோது, உடல் நிலை பாதித்து இறந்தார். அதை தொடர்ந்து, அவரது மனைவி கமுர்நிஷா,45; அரசின் வேலை வாய்ப்பு, மகனுக்கு கல்வி உதவித்தொகை பெற இருப்பிடம், வருமானம், ஜாதி மற்றும் ஓ.பி.சி., சான்றிதழ் கேட்டு, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சான்றிதழ் வழங்க, 2019ம் ஆண்டு ஆக.29ம் தேதி 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கண்ணன், 43; துணை தாசில்தார் அருள்பிரகாசம், 56; இதற்கு உடந்தையாக இருந்த உத்திரவன்னியன்,30; ஆகிய மூவரையும் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கண்ணன் அருள்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. விசாரித்த நீதிபதி நாகராஜன், இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் தாசில்தார் கண்ணன், முன்னாள் துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், உத்திரவன்னியனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 15, 2024 11:16

இப்படி லஞ்ச ஊழல்கள் தொடர்கதையாவதற்கு காரணம் அரசாங்கம் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பேருக்கு இடமாற்றம் செய்வதுதான். லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டால் தனது வேலை பறிக்கப்படும் என்று தெரிந்தால் எவனாவது அதை செய்வானா? மேலும், லஞ்சப்பணம் மேலே முதல்வர் வரை செல்வதால் அதை கண்டுகொள்வதில்லை. தேவையான கடும் சட்டங்களையும் அவர்கள் இயற்றுவதில்லை . நீதிமன்றங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல. அதனால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. இதில் மக்களும் இதற்க்கு பழகி விட்டார்கள். அவர்களும் திருட்டு திராவிடத்தால் கர்ப்ட் ஆகி வருகிறார்கள். எனவே வருங்காலம் மிகவும் கஷ்டம்.


Mani . V
நவ 15, 2024 05:45

இந்த மனிதாபிமானமற்ற நாய்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?