உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தப்பியோடிய திருடன் மீது கடலூர் போலீஸ் துப்பாக்கிச்சூடு

தப்பியோடிய திருடன் மீது கடலூர் போலீஸ் துப்பாக்கிச்சூடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தப்பியோடிய திருடன் ஸ்டீபனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில், திருடன் ஸ்டீபன் போலீசாரை கண்டதும் தப்பியோடினான். அவனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுப்பிடித்தனர். இவன் சிதம்பரம் அருகே 10 சவரன் நகை, லேப்டாப், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடி உள்ளான். இவன் திருடப்பட்ட நகைகளை சித்தாலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4bq4ay9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நகைகளை மீட்க சென்ற போலீசாரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு ஸ்டீபன் தப்பி ஓட முயற்சி செய்தான். அப்போது போலீசார் திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் கால் முட்டியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டீபன் மீது குமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vijai hindu
மார் 20, 2025 16:01

வாழ்க வளர்க நீதிமன்றம்


Nallavan
மார் 20, 2025 14:17

இவன் மேல் ஏற்கனவே 25 வழக்குகள் உள்ளன. 25 முறையும் ஜாமீன் பெற்று மறுபடி இந்த வழக்கிற்கும் ஜாமீன் க்கு விண்ணப்பிப்பான். கிடைக்கும். நாடு விளங்கிடும். வாழ்க நீதி அரசர்கள். வாழ்க நீதி மான்கள். வாழ்க நீதித்துறை.


Ramesh Sargam
மார் 20, 2025 12:32

காலில் சுட்டு பிடித்திருப்பதற்கு பதில், நெஞ்சில் சுட்டு கதையை முடித்திருக்கவேண்டும். இப்பொழுது என்ன நடக்கும்? வழக்கு பதிவு, ஜாமீன், பிறகு எப்பொழுதும்போல போதிய சாட்சி இல்லை என்று சொல்லி நமது நீதிமன்றங்கள் அந்த குற்றவாளியை விடுவிக்கும்.


Padmasridharan
மார் 20, 2025 11:00

இப்பெல்லாம் குற்றவாளிகள் பிடிக்கும் முன்னர் கை, கால் முறிவு ஏற்படுகிறதே.. ஏன்.. ஏன்.. ஏன்..


vijai hindu
மார் 20, 2025 14:29

அனுபவத்தால தெரிந்து கொள்ளவும்


Oru Indiyan
மார் 20, 2025 09:24

ரொம்ப ஓவர். காவல்துறை தன் இஷ்டத்துக்கு நீதியை கையில் எடுத்து கொண்டு வாரம் ஒருமுறை துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து ஆட்டம் போடுகிறது. அப்புறம் ஏன் நீதிமன்றம்? இந்த காவல்துறைக்கு ஒரு மந்திரி வேற. ஒவ்வொரு ஊழலில் பல திருடர்கள்.சுட முடியுமா காவல் துறையால்.


PRAKASH
மார் 20, 2025 08:58

சிரார்களுக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியாத வரை இது ஓயாது. பலர் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறார்கள்


अप्पावी
மார் 20, 2025 08:54

முட்டில லேசான காயமாம். எவ்ளோ பெரிய பேண்ட்டேஜ்டா? ஒரு பேண்ட் எய்ட் போதுமே? இதுக்காகவே நடக்க முடியலைன்னு முய்ணு வருஷம் பெட்ல இருப்பானே?


अप्पावी
மார் 20, 2025 08:51

மறுபடியும் மாவுக்கட்டு மகாத்மியமா? இதுக்கெல்லாம் எவன் செலவு செய்யறாண்? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்குறீங்களே?


Nandakumar Naidu.
மார் 20, 2025 08:46

சுட்டுப்பிடித்து அப்புறம் அவனுக்கு செலவு செய்யுங்க. என்கவுண்டர்லே போட்டு தள்ள வேண்டியது தானே.


புதிய வீடியோ