உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது; கட்சியினருக்கு மீண்டும் சொல்கிறது தி.மு.க.,

கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது; கட்சியினருக்கு மீண்டும் சொல்கிறது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது,'' என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தி.மு.க., மீண்டும் தடை விதித்து உள்ளது.தமிழகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என வந்தால், பேனர் வைப்பது கலாசாரமாகவே மாறிவிட்டது. இதற்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், அதனை கண்டு கொள்வது கிடையாது.குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்கள் தலைவரை வரவேற்பதற்காக, அவர்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் கட் அவுட், பேனர்கள் வைப்பது வாடிக்கை. இதனால், பல இடங்களில் பொது மக்கள் சில பிரச்னைகளையும், தொந்தரவுகளையும் சந்திக்கின்றனர். பேனர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிகழ்வும் அரங்கேறியது.இந்நிலையல், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:முதல்வர் உத்தரவுப்படி, இனிமேல் தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது.முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க வேண்டாம்.பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள் வைக்கக்கூடாது.கட்சித் தலைமையின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே தி.மு.க., தலைமை கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி கட் அவுட், பேனர் வைப்பது தொடர்கிறது. இந்நிலையில் இப்போது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Dharmavaan
டிச 06, 2024 08:23

கட் அவுட் வைக்க சொல்ல இந்த எதிர்மறை ஆணை ஊரை ஏமாற்ற


Rajarajan
டிச 06, 2024 08:05

தி.மு.க. தொண்டனின் மைண்ட் வாய்ஸ் - நீ வையின்னு சொன்னாலும், வைக்காதன்னு சொன்னாலும், நான் வச்சிக்கிட்டே தான் இருப்பேன், கட் அவுட் வச்சிக்கிட்டே தான் இருப்பேன்.


Rpalni
டிச 06, 2024 07:57

திருட்டு த்ரவிஷ குடும்பங்களே மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதுதானே. கொள்ளையே கொள்கை


அப்பாவி
டிச 06, 2024 07:18

கோல்ட்ஹேர் மேலே சேறு அடிச்சமாதிரி இந்த கட் அவுட் க்கு செய்ய முடியாதா?


Mani . V
டிச 06, 2024 06:10

திமுக வின் கொள்கைப்படி, ஒருவரை அடிக்காதே என்றால் அடிக்கணும் என்றும், வெட்டாதே என்றால் வெட்டணும் என்றும், கல் எறியாதே என்றால் எறி என்றும், குடிசையை கொளுத்தாதே என்றால் கொளுத்து என்றும், பேனர், கட்டவுட் வைக்காதே என்றால் அவசியம் வைக்கோணும் என்றும் அர்த்தம் என்பது கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமைகளுக்கு தெரியும்.


வாய்மையே வெல்லும்
டிச 06, 2024 05:42

அதோன்னும் இல்ல தொண்டரே இப்போ மழைக்காலம் மற்றும் புயல் வெள்ளம் காரணமாக காற்றுவீசும் நீங்க இம்மாம்பெரிய கட்சி பதாகைகள் அதுவும் முதல்வர் துணைமுதல்வர் படம் பொரித்து வைத்தால் காற்று வீசி அது அலங்கோல காட்சிதந்து எதிரணிக்கு நகைப்பு மற்றும் பேசும்பொருளாகிவிடும் . இதற்காக தான் சூசகமாக ஒரு சுற்றறிக்கை .


J.V. Iyer
டிச 06, 2024 04:32

முதல்வர், வருங்கால முதல்வர் பாணர் தவிர என்று பொருள் கொள்க.


M Ramachandran
டிச 06, 2024 04:01

அப்பா R.S. பாரதி இனிய வாய்ஸ் கேக்குதப்பா.


M Ramachandran
டிச 06, 2024 03:59

பின்னெ எப்படி பால் அபிஷேக கணக்கு காட்டுவது


S.kausalya
டிச 05, 2024 23:22

மேலும் மேலும் நிறைய பேனர் தங்களுக்கு மட்டும் அல்லாமல், தங்களின் குடும்பத்தினருக்கும் வையுங்கள் என்று அர்த்தம் கொள்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை