உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் அடிமையாக்கும் மர்ம கும்பல்: சென்னையில் போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு

சைபர் அடிமையாக்கும் மர்ம கும்பல்: சென்னையில் போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இணையவழி குற்றங்கள் செய்வதற்காக, இளைஞர்களை, 'சைபர்' அடிமைகளாக்கும் கும்பல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.நம் நாட்டில் இருந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு வாலிபர்கள் கடத்தப்படுகின்றனர். அங்கு அவர்களை பட்டினி போட்டு, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமையாக்கி வருகின்றனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்திலும் அதுபோன்று சைபர் அடிமையாக்கும் மர்ம கும்பல்கள் செயல்பட்டு வருவது, சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. கிராமங்களுக்குச் சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, 20 - 35 வயதுடைய நபர்களுக்கு, அவர்கள் வலை விரிப்பதாக தெரிகிறது.இந்நிலையில், கடந்த ஏப்., 29 முதல் ஜூன் 13 வரை, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராமநாதன், 65 என்பவருடன் பேசிய மர்ம நபர், பல்வேறு நிறுவனங்களில், 18.64 லட்சம் முதலீடு செய்தால், 4.20 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறி மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம், ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர், அந்த மர்ம நபரின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.அப்போது, எதிர்முனையில் பேசிய பெண், தன் பெயர் நந்தினி என்றும், மேற்கு தாம்பரம் மருத்துவமனை அருகே உள்ள, எச்.டி.எப்.சி., வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். 'நீங்கள், 2018ம் ஆண்டு எடுத்த காப்பீடு பாலிசியின் முதிர்வு தொகை, 2.85 லட்சம் ஆயிரம் ரூபாய் காலாவதியாகி விட்டது. நான் ஒரு, 'லிங்க்' அனுப்புகிறேன். அதில் வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யுங்கள்' என, கூறியுள்ளார்.அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை போலீசார் விசாரித்த போது, தேனாம்பேட்டை ரங்கூன் தெருவில், ஜெ.வி.எல்.பிளாசா என்ற கட்டடத்தில், ஐந்தாவது மாடியில் இருந்து பேசுவதை கண்டறிந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது, 50 பேருடன் போலி கால் சென்டர் செயல்படுவது தெரியவந்தது. 50 பேரும் சைபர் அடிமையாக்கப்பட்ட நபர்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. போலி கால் சென்டர் உரிமையாளர் முனீர் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 28, 2025 12:20

வேலை வெட்டியில்லாத பல்லாயிரம் அடிமைகளிடம் வேலை வாங்கித்தருகிறேன் என்று நூற்றுக்கணக்கான கோடிகளில் மோசடி செய்து நீதிமன்றம் சென்று வாங்கியபணத்தை திரும்பக்கொடுத்துவிட்டேன், நான் யோக்கியன், என்று மந்திரியாக ஒருவன் வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றித்திரிகிறான். அவனையும் யோக்கியன் என்று சான்றிதழ் கொடுக்கும் கட்சியும் உண்டு. அதற்க்கு ஓட்டுப்போடும் விலங்குகளை விட மோசமான ஜென்மங்களும் கூட உண்டு. ஒரே ஒரு நெருடல் - அந்த மர்மநபரின் முதலாளி ஹுசைன். திராவிட மோசடியை விட இது ஒன்றும் அவ்வளவு கெடுதல் இல்லை.


RAVINDRAN.G
ஜூன் 28, 2025 10:31

பெயர் சொன்னாலே போதும். அதன் தரம் சொல்லியா தெரியவேண்டும். இவர்களால்தான் உண்மையான முஸ்லிம்களுக்கே அவமானம். அவர்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.


Sundar Pas
ஜூன் 28, 2025 10:05

பெயர் ஒன்றே போதும் தரம் நிரந்தரம்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 28, 2025 03:44

முனீர் உசைன் , பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் , உன்னை உங்களது ஜமாத்தில் இருந்தே விலக்கி வைக்க வேண்டுமடா , செய்யும் தைரியம் இருக்கா ஜமாத்துக்கு


சமீபத்திய செய்தி