சென்னை:தமிழகத்தில், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக, கடந்த ஒன்பது மாதங்களில், 1 லட்சத்து, 22,057 புகார்கள் பதிவாகி உள்ளன.
பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இணையவழி குற்றம் தொடர்பாக, '1930' என்ற எண்ணிலும்,
www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களும், இந்த இணையதளத்தில் தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு செப்., வரை, தமிழகத்தில் நடந்த இணையவழி குற்றங்கள் தொடர்பாக, 1 லட்சத்து, 22,057 புகார்கள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில், 1 லட்சத்து, 27,065 புகார்கள் பதிவாகின.
மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இணையவழி குற்றங்கள் நடந்தால், 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டிய அவசியம் குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் பயனாக, இந்த ஆண்டில், 1.22 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன . அடுத்தடுத்த ஆண்டுகளில் புகார்களின் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். புகார்களும், வழக்குப்பதிவும் ஆண்டு பதிவான புகார்கள் 2023 95,084 2024 1,27,065 2025, செப்., வரை 1,22,057 ** ஆண்டு எப்.ஐ.ஆர்., பதிவு சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கப்பட்டது விசாரணையில் 2023 3,097 64,501 27,486 2024 4,326 80,206 42,533 2025, செப்., வரை 2,003 72,525 47,529 ***