உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திர கரையை கடக்கிறது மோந்தா; தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆந்திர கரையை கடக்கிறது மோந்தா; தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' புயல், இன்று தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக, சென்னை உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் மற்றும் திருத்தணியில் தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. 57 சதவீதம் இதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 14 செ.மீ., ஆனால், 23 செ.மீ., மழை பெய்து உள்ளது. இது, இயல்பை விட 57 சதவீதம் அதிகம். அத்துடன், 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. எச்சரிக்கை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. இது, நேற்று காலை நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 520 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 570 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, இன்று காலை தீவிர புயலாக வலுவ டைந்து, மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90 -- 100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் நவம்பர் 2ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது. மோந்தா புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 100 முதல், 110 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், தமிழக, ஆந்திர, ஒடிஷா கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளிகளுக்கு விடுமுறை மோந்தா புயல் மற்றும் அதி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிஷாவில்... மோந்தா புயல் காரணமாக, ஆந்திராவில் காக்கி நாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உட்பட 14 மாவட்டங்களில், இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரகாசம், கர்னுால், திருப்பதி உட்பட எட்டு மாவட்டங்களில், மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அனந்தபுரமு, ஸ்ரீசத்யசாய், அன்னமையா, சித்துார் ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதே போன்று ஒடிஷாவிலும், பெரும் பாலான கடலோர மாவட்டங்களிலும், அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி