உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை அருகே நாளை கரை கடக்கும் புயல் சின்னம்; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை அருகே நாளை கரை கடக்கும் புயல் சின்னம்; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அருகே நாளை(அக்.17) புயல் சின்னம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில் நாளை(அக்.17) கரையைக் கடக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xxgysltr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது. அதிகளவாக புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் 130 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய வடமேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.சென்னை மற்றும் புறநகரில் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை, சில இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்.1 முதல் நேற்று வரை(அக்.15) வரை 120 மி.மீ., மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழையளவு 70 மி.மீ என்ற நிலையில் கூடுதல் மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

God yes Godyes
அக் 16, 2024 16:17

ரோட்ல ராமசாமி சிலை வச்சா மழை பேஞ்சா கூட தண்ணி தேங்காது.


God yes Godyes
அக் 16, 2024 16:14

புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை தான் உள்ளது.


angbu ganesh
அக் 16, 2024 09:52

எவன் வந்தாலும் துட்ட தின்னுட்டு மக்களை சாகடிப்பானுங்க, இவனுங்க கிட்ட சிக்கரத்துக்கு மழைல சாகலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை