உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில்: தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில்: தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்; நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் வழியாக திருப்பதிக்கு தினமும் பகல், இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். ஆனால், போதுமான ரயில்கள் இல்லை. சென்னையில் இருந்து மட்டும் தான் தினமும் திருப்பதிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில்கள் இல்லை. மதுரை வழியாக செல்லும் ஓகா, கச்சக்குடா, திருப்பதி, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி, மும்பை சி.எஸ்.எம்.டி, மும்பை எல்.டி.டி. போன்ற வாராந்திர ரயில்கள் மூலம் தான் தென் மாவட்ட மக்கள் திருப்பதி சென்று வருகின்றனர். இவற்றில் திருப்பதி எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள் அனைத்தும் தொலைதுாரம் செல்பவை. எனவே இந்த ரயில்களில் எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனைத் தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், வேலூர் வழியாக திருப்பதிக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ