மேலும் செய்திகள்
பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
25-Apr-2025
சென்னை: பழனிசாமிக்கு எதிராக தயாநிதி தாக்கல் செய்த அவதுாறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்தாண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க., -- எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய தொகுதி நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை' என, குற்றஞ்சாட்டினார்.பழனிசாமியின் பேச்சு, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர் மீது தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
25-Apr-2025