என் உதவியாளருக்கு கொலை மிரட்டல்
என் தனிச் செயலரும், கட்சியின் ஊடக தொடர்பாளருமான சுவாமிநாதன் மற்றும் எனக்கு பணி செய்பவர்களை மிரட்டி, எனக்கு யாரும் வேலை செய்யக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஏற்கனவே ஒட்டுக்கேட்பு கருவியை வீட்டில் வைத்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் தான், சுவாமிநாதனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர் டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட அநாகரிகமான செயல்களை, ஒரு கும்பல் தான் திட்டமிட்டு செய்து வருகிறது. சுவாமிநாதனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டி.ஜி.பி., மற்றும் காவல் துறையினரை கேட்டுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் என்னுடன் இருப்போர் அஞ்ச மாட்டார்கள். நானும் அஞ்ச மாட்டேன். -ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,