உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தையில் நேற்று நடந்த தே.மு.தி.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், பிரேமலதா பொதுச்செயலராகவும், அவர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலராகவும், நான்கு புதிய துணை செயலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பொதுக்குழுவில் ஒன்பது பேர் அடங்கிய தலைமை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலராக இருந்த பிரேமலதா, அவைத்தலைவராக இருந்த இளங்கோவன் அப்பதவியில் தொடர்கின்றனர்.

மோதிரம் அணிவிப்பு

துணைச்செயலராக இருந்த பிரேமலதாவின் தம்பி சுதீஷ், பொருளாளராகவும், துணை தலைவராக இருந்த பார்த்தசாரதி தலைமை நிலைய செயலராகவும், கொள்கை பரப்பு செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணை செயலர்களாக பன்னீர்செல்வம், சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சுபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த, ஒன்பது பேரும் தே.மு.தி.க., தலைமை கழக நிர்வாகிகளாக இருந்து செயலாற்றுவர் என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.அதேபோல நிர்வாகிகள் பலரும் கேட்டு கொண்டதற்கிணங்க, விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்கப்படுவதாக அறிவித்து, விஜயகாந்த் அணிந்த மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு பிரேமலதா அணிவித்தார்.

பின், பிரேமலதா பேசியதாவது:

கடலுாரில் அடுத்தாண்டு நடத்தப்படவிருக்கும் கட்சி மாநாட்டுக்கு முன், தமிழகத்தின், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.அவர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும். கூட்டணி குறித்து உரிய நேரத்தில், சரியான முறையில் அறிவிப்பு வரும். நானும் கட்சியின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட விஜய பிரபாகரனும், தமிழகத்தின் பட்டி, தொட்டிகள்தோறும் சென்று, மக்களை சந்திக்க உள்ளோம்.

பலம் தெரியும்

கட்சியின் இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் பேசியதாவது: கட்சியினர் அனைவரும், நல்ல மொபைல் போன் வாங்க வேண்டும். அதன் வாயிலாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டும். நம் கட்சியை, 1 சதவீத ஓட்டு கூட இல்லை என, விமர்சிக்கின்றனர். யானை நடக்க நடக்கத்தான் வழி தெரியும் எனக் கூறுவர். அதுபோல உங்கள் கருத்துகளை கூறுவதால் மட்டும் தான், நம் பலம், மற்றவர்களுக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மத்தியில் வென்று காட்டி, நம் கட்சியினர் கோட்டைக்குச் செல்ல வேண்டும்.அனைத்து மேடைகளுக்கும் துவக்கத்தில் இருந்தே, பேன்ட் - சட்டை அணிந்து வரும் நபர் நான் தான். இந்த பொதுக்குழு வாயிலாக தே.மு.தி.க., 2.0 ஸ்டார்ட் ஆகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பொதுக்குழுவில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் பலரும், எத்தனை நடிகர்கள் அரசியல் கட்சித் துவங்கினாலும், விஜயகாந்துக்கு ஈடாக முடியாது என பேசினர். ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. 'தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிபடிப்பாக குறைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 10 தீர்மனங்கள், தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த, 2,500 பேருக்கு சிக்கன் பிரியாணி, பாறை மீன் வருவல், முட்டை, வெங்காய பச்சடி, பாயாசம், சாதம், ரசம் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

கடலுாரில் கூட்டணி அறிவிப்பு!

கடலுாரில் அடுத்தாண்டு ஜன., 9ல் நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து, பிரேமலதா அறிவிப்பார். அதில், நாம் யாரோடு கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும். பிரேமலதா எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமா அல்லது முதல்வராக வேண்டுமா என்பதை, தொண்டர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.- சுதீஷ், பொருளாளர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராமகிருஷ்ணன்
மே 01, 2025 10:18

வாரிசு அரசியல் என்று திமுகவை குறை கூறியவர்கள் எல்லாம் அவரவர் கட்சிகளை எப்படி நடத்துகிறார்கள். பி ஜே பி யை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பிரைவேட் லிமிடெட் கட்சிகள்தான்.


Kasimani Baskaran
மே 01, 2025 07:25

ஆத்தா தீம்க்காவா அல்லது தாத்தா தீம்க்காவா அல்லது ஓட்டைப்பிரிக்க தனி அணியா அல்லது விசை அண்ணாவுடன் கூட்டா... தீம்க்கா ஜெயிக்க பலர் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் தீம்க்காவே சுக்குநூறாக உடைந்து ஊழல் கூட செய்ய முடியாத நிலை வந்தால் உடன் பிறப்புக்களுக்குக் கூட ஒரு பயனும் இல்லை.


Oviya Vijay
மே 01, 2025 07:01

தேமுதிக-வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அந்த கட்சி அவ்வளவு ஒர்த் இல்லை... மக்களில் பெரும்பாலோர் விஜயகாந்த் அனுதாபிகள் தானே தவிர, இனிமேலும் தேமுதிக-விற்கு ஓட்டு போடக் கூடியவர்கள் அல்ல... ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் இந்த கட்சிக்கு அதிகபட்சம் 500 முதல் 600 ஓட்டுகள் மட்டுமே இருக்கும். அதுவே அதிகம்... அதனால் மற்ற கட்சிகள் இனிமேலும் அதனை தூக்கி விட வேண்டியதோ, தூக்கி சுமக்க வேண்டியதோ இல்லை... அது ஒரு தேய்பிறை... அவ்வளவே... கட்சி ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கத்திலிருந்து என்றோ அது தடம் மாறிச் சென்று விட்டது... பலகாலமாக அரசியலுக்கு "இந்தா வர்றேன்... இந்தா வர்றேன்" என்று கூறிக்கொண்டிருந்த ரஜினி எவ்வாறு டீசென்ட்டாக ஒதுங்கிக் கொண்டது போல, தன் வாழ்நாளில் என்றைக்குமே அரசியலுக்கு வரப்போவதில்லை என தெளிவாக அறிக்கை விட்டு ஒதுங்கிக் கொண்ட அஜித் போல நீங்களும் கட்சியைக் கலைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியான வாழ்க்கை வாழுங்கள்... அதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் உண்மையான தொண்டு... இனிமேலும் நீங்கள் அரசியலில் இருந்து சாம்பாதித்து தான் உங்கள் வாழ்க்கையைத் தள்ள வேண்டும் என்பதில்லை... தற்போது உங்களிடம் இருக்கும் சொத்துகளே உங்களின் பல தலைமுறைகளுக்கு வரும்... எந்த காலத்திலும் ஆட்சி அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரப் போவதில்லை... இனி எந்த தேர்தலிலும் நீங்கள் ஜெயிக்கப் போவதுமில்லை... கள நிலவரம் உணருங்கள்... உங்களைச் சுற்றி இருக்கும் துதி பாடும் கும்பலின் புகழ் போதை வார்த்தைகளிலிருந்து வெளியே வாருங்கள்... ஒதுங்கி நின்று மக்களுக்கு சேவை செய்யுங்கள்... அதுவே போதும்...


Oviya Vijay
மே 01, 2025 06:59

மக்கள் கேப்டனை மட்டும் தான் நம்பினார்கள்... உங்களை அல்ல... கேப்டன் நல்ல உடல்நலத்துடன் இப்போது உயிரோடிருந்திருந்தால் அரசியல் களமே வேறாக இருந்திருக்கும்... மக்கள் மனதில் கேப்டனுக்கான இடத்தில் பிரேமலதாவுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ என்றைக்குமே இடமில்லை... இனிமேலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க நீங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்... யோசித்து முடிவெடுங்கள்...


அன்பு
மே 01, 2025 16:06

பட்டி தொட்டி எங்கும் சென்று மக்களை சந்தியுங்க. பெட்டி பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டு கடைசியில் பெரிய பெட்டி தரும் கட்சியுடன் இணைந்து கொள்ளுங்க. மற்றக் கட்சிகளுக்கு காலை வாரி விடுங்கள். இது உங்க ஜாதகம்.


Rajarajan
மே 01, 2025 06:04

இந்தம்மாக்கு என்ன நினைப்பு ?? தன்னை பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்கவேண்டும் என்று. அ .தி.மு.க.வும், ம.தி.மு.க. வும் ஒன்றா ?? கடைசியில், இவராகவே ஒரு கட்டு கதையை அவிழ்த்துவிட்டு, பா.ஜ.க. கட்சியில் கூட்டணி வைப்பார் இவரது ஆசை என்ன ?? மகனுக்கு மத்திய அமைச்சை பதவி. எப்படி ? நோகாமல் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கி, அதன்மூலம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர, வீடு தேடி பா.ஜ.க. வரும் என்று வீராப்பு.


மீனவ நண்பன்
மே 01, 2025 01:44

அது வரைக்கும் கட்சி கரைந்து விஜய் கட்சியிலோ திமுகவிலோ சங்கமம் ஆகாம இருக்கணுமே


புதிய வீடியோ