உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ துறை மீது அவதுாறு; இ.பி.எஸ்., மீது எரிச்சல்

மருத்துவ துறை மீது அவதுாறு; இ.பி.எஸ்., மீது எரிச்சல்

சென்னை: 'தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியா, எரிச்சல் சாமியா என்கிற அளவிற்கு, மருத்துவ துறை மீது அவதுாறுகளை பரப்பி வருகிறார்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆட்சியில், மக்கள் சந்தித்த இன்னல்களை பட்டியலிட, மனம் வலிக்கிறது. இன்னல்களுக்கு மருந்தாக, மக்கள் அளித்த தீர்ப்பே ஆட்சி மாற்றம். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சாதனை படைக்கப்படுகிறது. இது மக்களுக்கு புரிகிறது. சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக, சாதனைகளை நினைவுகூர்கிறேன்.அதன்படி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், பாதம் காப்போம் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக, மத்திய அரசின் விருதுகளை வாங்கி குவித்து வருவதுடன், உலக அளவில் உயரிய விருதான, ஐ.நா., விருது பெறப்பட்டுள்ளது.எங்கள் ஆட்சியில், இது போன்ற சாதனை பட்டியலை கூறினால், நீண்டு கொண்டே செல்லும். இவை, பழனிசாமிக்கு புரியுமா எனத் தெரியவில்லை. மத்திய அரசு, 2017ல் இருந்து விருதுகளை வழங்கி வருகிறது. தமிழகம் 614 விருதுகளை பெற்றுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 545 விருதுகள் கிடைத்துள்ளன. இவை, 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கும், மூன்றரை ஆண்டு கால மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.தற்போது, தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து, அரசு மருத்துவமனைக்கு அதிகம் மக்கள் வர துவங்கி உள்ளனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனை பயன்பாடு அதிகரித்துள்ளது. அற்ப அரசியலுக்காக, ஏழை மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை, குறை கூறி குளிர்காய நினைக்காதீர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ponssasi
நவ 21, 2024 11:16

அவர்கள் செயல்பாடு சரியில்லைன்னுதான் உங்களை ஆட்சியில் அமரவைத்துள்ளார்கள் , உங்களை கேள்வி கேட்டால் நீங்க யோக்யமான்னு திருப்பி கேக்குறீங்க. குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பாருங்க, இல்லனா இன்னைக்கு EPS நிலைதான் உங்க தலைவருக்கும். மருத்துவர் வாக்குகள் வேண்டும் என்பதற்காக பொதுஜன மக்களை அவமான படுத்தாதீர்கள், அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது என்று நீங்களும் உங்கள் சக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு அமைச்சரே?


sankar
நவ 21, 2024 10:20

"மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், பாதம் காப்போம்"- நல்ல கவிதை, நன்றாக இருக்கிறது


சம்பா
நவ 21, 2024 09:18

சமீபத்தில ஒரு விடீயோ வெளியாச்சு அதபாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை