உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி

பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி

''தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதன்பின் அமையவுள்ள ஆட்சியில், பா.ஜ.,வுக்கு பங்கு கொடுக்க வாய்ப்பே இல்லை; தனித்தே ஆட்சி அமைப்போம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை கேட்க நாங்கள் ஏமாளி அல்ல,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4vnxaazh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில், பா.ஜ., கட்டாயம் அங்கம் வகிக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.ஆனால், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது' என, கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பதிலுக்கு கூறி வருகிறார்.

மறுக்கவில்லை

இந்நிலையில், தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:'பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்ததால் தான், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது' என, தமிழக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். ரெய்டு நடந்தது உண்மை தான்; மறுக்கவில்லை.ஆனால், அது சம்பந்தி வீட்டில் அல்ல; உறவினர் வீட்டில் தான் நடந்தது. ரெய்டுக்கு எல்லாம் அச்சப்பட்டு அரசியல் செய்பவன் அல்ல, இந்த பழனிசாமி. சட்டசபை நடந்து கொண்டிருந்த போது, அமைச்சர் நேருவின் மகன் மற்றும் தம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அந்த தகவல் வந்ததும், அவர் தான், கூட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பாதியில் எழுந்து பதற்றத்தோடு சென்றார். இவ்வளவு அழுக்கை வைத்துக் கொண்டு இருப்பவர் தான், எங்கள் அழுக்கு குறித்து பேசுகிறார். எங்களை பற்றி பேச அவருக்கு எவ்வித அருகதையும் கிடையாது. நடக்காத எதையும் நடந்தது போல பேசி, எதையும் மடைமாற்றம் செய்வதில் வல்லவர்கள் தி.மு.க.,வினர். எத்தனை முறை பேசினாலும், பொய் பொய் தான்.கொள்ளை அடித்த பணத்தை பதுக்கியதால் தான், தி.மு.க., பிரமுகர்களின் வீடு தோறும் அமலாக்கத்துறை கதவை தட்டி சோதனை நடத்தி துாக்கத்தை கெடுக்கிறது. அலறலில், தி.மு.க.,வினர் ஊரைக் கூட்டுகின்றனர். நான் ஒரு விவசாயி. யாருடைய தயவும் இன்றி, கிளைச்செயலர் பொறுப்பில் இருந்து, படிப்படியாக உயர்ந்து, அ.தி.மு.க., எனும், மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலராகி உள்ளேன். ஸ்டாலினை போல அப்பா பெயரை பயன்படுத்தி அரசியலுக்கு வரவில்லை. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டதும், தீண்டத்தகாத கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது போல தி.மு.க.,வினர் விதண்டாவாதம் பேசுகின்றனர்.அதே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, மத்திய அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி சுகத்தை அனுபவித்த போது, பா.ஜ., தீண்டத்தகாத கட்சியாக தி.மு.க.,வுக்கு தெரியவில்லையா?இந்த நியாயத்தை கேட்க விடுதலை சிறுத்தைகளுக்கோ, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கோ தெம்பில்லை.

கடும் அச்சம்

தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதையே முழு நேர தொழிலாக கொண்டிருக்கும் அக்கட்சிகள், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி குறித்தே சர்வ சதா காலமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து வலுவான கூட்டணி அமைத்து விட்டதால், தி.மு.க., கூட்டணியினருக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைப்போக்கவே, இப்படி எதை எதையோ பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கட்சிகள், தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டன.சட்டசபையில் என்னை பார்த்து, 'என்னங்க, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டீர்கள். ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று பேசினீர்களே?' என, முதல்வர் ஸ்டாலின் கேட்டார். உடனே, 'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?' என்று நான் கேட்டேன். 'பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், ஆட்சியில் பங்கு கேட்பர்' என்றார். ஸ்டாலின் அவர்களே, ஒரு நாளும் நீங்கள் இதற்காக பதற்றப்பட வேண்டாம். ஆட்சியில் பங்கு கொடுக்க, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அ.தி.மு.க.,வே தனிப்பெரும்பான்மை பெறும் போது, யாருக்கும் பங்கு தர வேண்டியதில்லை. எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதை பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். வாரிசை முதல்வர் ஆக்குவதற்காக, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற துடிப்பான நிலையில் அ.தி.மு.க., இல்லை. எங்களது ஒரே நோக்கம், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான்.அந்த எண்ணத்தோடு வருகிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு ஒருமித்த எண்ணத்தோடு வருவர்.

அகற்றுவர்

உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுப்பர். அதை எடுத்து விட்டால் மூச்சு நின்று விடும். அதுபோன்ற நிலையில், தி.மு.க., அரசு உள்ளது. விரைவில் வென்டிலேட்டரை மக்கள் அகற்றுவர். இவ்வாறு பழனிசாமி பேசினார். ஆட்சியில் பங்கில்லை என்ற பழனிசாமியின் இந்தப் பேச்சால், பா.ஜ., தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கும் இந்த பேச்சு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள், அமித் ஷா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். 'அமித் ஷாவின் கருத்தை அறிந்து, இந்த விஷயத்தில் பா.ஜ., தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும்' என தமிழக பா.ஜ., தரப்பில் சொல்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 105 )

M Ramachandran
ஆக 21, 2025 02:29

பழனி நோ சான்ஸ். நிச்சயம் உன்னை அப்பா வெற்றி கொள்ள விட மாட்டார். உன் தொகுதியில் ஏராள பணம் புரளும் விளையாடும். சாமா பேத தண்ட அதனையய வழிகளும் கையாளப்படும் உன் ஆணவ திமிரை அடக்க. சுய நலமியான உன் அரசில் எதிர் காலம் அஸ்தமனம் எதிர் பார்க்கலாம். அல்லது ஸ்டாலின் மேடையில் பேசும் போது வேட்டிக்குள் தவழ்ந்து சென்று பிடிக்கவும். பின் அஞ்சேல் என்று அபயம் அளிப்பார்.


M Ramachandran
ஆக 19, 2025 03:24

அப்புறம் எதற்கு கூட்டணினு உதார் உடுற. தில்லியிருந்தா தனியா நில்லு. ஊர்ந்து போயி பதவி வாஙகினது மறந்துடுச்சா. தனியா நினா டெபொசியிட்டுக்கென மொலாசம் ஆயிடும் தானே பயம். அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.


Tiruchanur
ஆக 01, 2025 13:50

. ஏற்கனவே அதிமுக 20% வோட்க்கும் கீழே வந்தாச்சு. இப்படி பேசினால் இன்னும் கீழே போகும்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 27, 2025 05:10

“ வாரிசை முதல்வர் ஆக்குவதற்காக, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற துடிப்பான நிலையில் அ.தி.மு.க., இல்லை.” - வாரிசை அமலாக்கத்துறையிடமிருந்து காப்பாத்துறதுக்கு பாஜாக்கா கூட்டணி என்ற நிலைமை என்கிறீரா? உங்கள் சம்பந்தியை பிடித்தால் கர்நாடக மாநில பாஜக தலையும் உருளுமே, பிறகும் உமக்கு என்ன பயம்? அதனால் தான் துள்ளுகிறீர்களா? ஒருவேளை கொடநாடு வழக்கில் உங்களையே சாச்சுட்டா? ஆத்தீ, நெனைச்சாலேபகீர்ன்னு இருக்கா?


Radhakrishnan
ஜூலை 25, 2025 14:08

இது தான் அய்யா திமிர் பேச்சு. மொதல்ல நீங்க ஜெயிக்க முடியுமா என்று பாருங்கள் அதுக்கு அப்புறம் ஆட்சி பத்தி பேசுங்க. இப்போவே இப்படி பேசினால் ஒரு ஒட்டு கூட கிடைக்காது. நீங்கள் ஒன்னும் தி மு க வுக்கு சளைத்தவர்கள் அல்லவே. காலில் விழுந்து மேலே வந்தவர்கள் தானே.


xyzabc
ஜூலை 24, 2025 14:53

ஏதோ ஆட்சியே வந்த மாதிரி பேசறாரு.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 07:30

வரப்போறதில்லைன்னு தெரிஞ்சே அமீத்சா சொன்னாருன்னு அண்ணமலே எதுக்கு இந்த குதி குதிக்கணும்?


J. Vensuslaus
ஜூலை 24, 2025 02:24

EPS அவர்களே, நீங்கள் சொல்வதும் நடக்காது, அமித் ஷா சொல்வதும் நடக்காது. நீங்கள் இருவரும் அஞ்சும் ஒரு முடிவுதான் வரும்.


Siva Subramaniam
ஜூலை 23, 2025 08:40

Of course, only if they win, this question arises. So, dont bother.


Thravisham
ஜூலை 21, 2025 22:21

திருட்டு ஆட்சியில் பங்கு தேவையில்ல ஆனால் 30 சதவீத சீட் பெறணும்.


KR india
ஜூலை 21, 2025 22:19

நினைப்பு தான் சில நேரம் பிழைப்பை கெடுக்குமாம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருது ஒரு ஊரில், பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை. ஒரு முறை, அவன் பிச்சையெடுக்கும் போது, ஒரு வீட்டில், அவனுக்கு, ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய, பால் கிடைத்த சந்தோஷத்தில், அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து, காய்ச்சி, அதில் கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை தயிராக்கும் பொருட்டு, உறையூற்றி ஒரு உறியில் தொங்கவிட்டான். தனது குடிசையில் உள்ள கயிற்று கட்டிலில் சாய்ந்தவன் மெல்ல கண்ணயர்ந்தான். கனவில், யோசிக்க ஆரம்பித்தான். “காலை இந்த பானையில் உள்ள பால் முழுதும் தயிராகியிருக்கும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை காய்ச்சினால் நெய் கிடைக்கும். அதை பக்கத்து ஊர் சந்தைக்கு கொண்டு சென்று விற்று நல்ல லாபம் பார்ப்பேன். பின்னர் அதை வைத்து ஒரு ஜோடி ஆடுகள் வாங்குவேன். ஆடுகளை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்ப்பேன். இரண்டு விரைவில் நான்காகும். நான்கு அப்படியே எட்டாகும். ஒரு ஆட்டுப் பண்ணையே வைக்கும் அளவிற்கு என்னிடம் ஆடுகள் பல்கி பெருகும். ஆடுகளை அப்படியே சந்தையில் விற்றுவிட்டு, இரண்டு பசுக்கள் வாங்குவேன். பசுக்கள் மூலம் பால் வியாபாரம் செய்து நன்கு பொருளீட்டுவேன். பசுக்கள் பல்கி பெருகும். அடுத்து அதை வைத்து குதிரைகளை வாங்குவேன். குதிரைகளும் பல்கி பெருக, குதிரை லாயம் அமைப்பேன். குதிரைகளை அக்கம் பக்கத்து ஊர்களுக்கும், சமஸ்தானங்களுக்கும் விற்பேன். இப்படி நான் செல்வந்தனானவுடன், எனக்கு, பெண் தர, பலர் முன்வருவார்கள். ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் குடும்பம் நடத்துவேன். எனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனை நான் கொஞ்சி மகிழ்வேன். மகன் தவழும் பருவத்தில், தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான். குதிரைகள் குழந்தையை மிதித்துவிட்டால் என்ன செய்வது? எனக்கு கோபம் தலைக்கேறும். “குழந்தை குதிரைக்கு அருகே செல்வதை கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்?” என்று என் மனைவியை எட்டி உதைப்பேன்.” கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவன், தன்னை மறந்து எழுந்து கால்களை தூக்கி உதைக்க, மேலே உறியில் தொங்கவிடப்படிருந்த பால், பானையில் கால்பட்டு, பானை உடைந்து கீழே விழுந்து, எல்லா பாலும் கொட்டிவிடுகிறது. பிச்சையாக கிடைத்த எல்லா பாலும் வீணாக போய்விடுகிறது. நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள் அல்லவா? அதன் அர்த்தம் இது தான். இலக்குகளை அடைய உழைக்காமல் செயலாற்றாமல் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களுக்கும், மேற்கூறிய கதையில் உள்ள பிச்சைக்காரனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மேலே நான் குறிப்பிட்டுள்ள பிச்சைகாரன் உதாரணம், தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுப்பதில் கவனத்தை செலுத்தாமல், அதற்கு உழைக்காமல், எதிர்காலத்தில், வெற்றி பெற்றால், மீண்டும் படியுங்கள் வெற்றி பெற்றால் ? வெற்றி பெற்றால் ? என்பது இங்கே Question Mark தான் ? அவ்வாறு இருக்கும் போது, வெற்றி பெற்றால் ? கூட்டணி ஆட்சி தான் என்று, முக்கிய கூட்டணி கட்சியான, அ.தி.மு.க வை சீண்டுவது போல், கருத்து தெரிவிக்கும் பா.ஜ.க வா ? திரு. அமித்ஷா அல்லது, அந்த கருத்தில், தங்களுக்கு உடன்பாடில்லை, வெற்றி பெரும் முன்னே, இவ்வாறெல்லாம் பேசினால், அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைவார்கள். திரு.அமித்ஷா அவர்கள், இவ்வாறு பேச வேண்டாம் என்று கூறுங்கள் என்று, பா.ஜ.க தேசிய தலைவர் திரு.நட்டா மற்றும், Prime Minister திரு.மோடி அவர்களிடம் நாசூக்காக கூறுவதை விட்டு விட்டு, பொதுவெளியில், வெளிப்படையாக எதிர்த்து, கருத்து கூறி வரும், அ.தி.மு.க வா ? அல்லது இருவருமேவா ? என்பதை, அறிவார்ந்த, சக தினமலர் வாசகர் நண்பர்கள் இங்கே குறிப்பிடலாம், என வேண்டுகிறேன். யார் மீது தவறு ? வாசகர்கள் தீர்ப்பு என்ன ? தீர்ப்பு-1 திரு.அமித்ஷா மீது தவறு தீர்ப்பு-2 திரு.பழனிசாமி மீது தவறு தீர்ப்பு-3 உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட ? என்ற பழமொழிக்கேற்ப இருவருமே, தேவையற்ற வார்த்தைகளை வெளியிடுகின்றனர் ?


SANKAR
ஜூலை 21, 2025 23:34

1.amit shah started this OPENLY AND IN PUBLIC.He did it with Modis approval...it is obvious


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 06:05

தீர்ப்பு 1 மற்றும் தீர்ப்பு 2 கூடவே தீர்ப்பு 3


முக்கிய வீடியோ