உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=971j4f6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. இந்தப் பாறை உருண்டால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதம் ஏற்படும் போது, மலைகளை பிளந்து எடுக்கக் கூடிய பணி செய்பவர்களை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து அழைத்துள்ளோம். மதியத்திற்குள் வந்துவிடுவார்கள். அதுவும் கீழே இருக்கும் மண் உறுதித்தன்மை பெற்ற உடனே தான் மலைகளை உடைக்க முடியும். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் மோகன் மற்றும் பூமிநாதன் ஆகியோரை அங்கிருந்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அவர்கள் வந்த பிறகு தான், கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலைமை தெரியும். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலிலும் மீட்பு பணி நடந்து வருகிறது. போதுமான அளவுக்கு மீட்பு பணிகளில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரிய சாலையாக இருந்திருந்தால், ஹிட்டாச்சி அல்லது ஜே.சி.பி.,யை விட்டு, 2 மணி நேரத்தில் அகற்றியிருக்கலாம். தற்போது, ஒருவர் வெளியே சென்றால் தான், மற்றொருவர் வரும் நிலை உள்ளது. கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை காலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thiagu
டிச 02, 2024 20:44

எல்லோரும் விடியலுக்கு ஓட்டு போடுங்க, நல்லா இருப்பீங்க


தமிழ்வேள்
டிச 02, 2024 19:42

திராவிட ஆப்ரஹாமிய மாடல் கும்பல் இனியும் திருந்தவில்லை என்றால் இதுபோல பல உற்பாதம் மாநிலம் முழுவதும் நடக்கும்..திராவிசத்துக்கு சங்கு ஊதப்படும் என அண்ணாமலையார் எச்சரிக்கை தருவதே இந்த சம்பவம்... திராவிடம் திருந்தவில்லை என்றால் அவர்கள் கதி அதோகதி ஆகிவிடும்...


Dharmavaan
டிச 02, 2024 16:39

எ வா வேலுவுக்கு இது போல் ஏன் நடக்கவில்லை, நடந்தால் நாடு நலம் பெரும்


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 14:49

பெருமழை காரணமாக நிலச்சரிவும் பாறை உருண்டு விழுவதும் திராவிட மாடல் ஆட்சி என்று எழுதுகிற அளவுக்கு மூடர்களா இந்த வாசகர்கள்??? வெட்கம்... வெட்கம்.


M Ramachandran
டிச 02, 2024 13:11

ரோஜா யு டியூபில் ஜோதிடர் பாபு கூறி யுள்ளது நடந்தேஆரி வருகிறது. காடுகளை அழித்து காசு பார்த்தவர்களின் கைங்கர்யம்


கூமூட்டை
டிச 02, 2024 12:18

இது தான் திராவிட மாடல் ஆட்சி இதைப் பற்றி RSB தாங்கும்


V RAMASWAMY
டிச 02, 2024 11:57

இவற்றை எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் கேட்டு விளக்கம் அளியுங்கள்.


veeramani hariharan
டிச 02, 2024 11:55

Of course is it due to encroachment. If it so, it shld be removed to avoid further damages


Rangarajan Cv
டிச 02, 2024 11:41

Thiruvannamalai incident is man made disaster. Human beings encroachment in vast mountains area recklessly lead to this. Avoidable unfortunate disaster. We the people are responsible.


Sidharth
டிச 02, 2024 11:19

இந்த மழைக்கும் திராவிட மாடல் தான் காரணம்னு யாரும் இன்னும் வரலியா


முக்கிய வீடியோ