உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரத்தில் அயோத்தி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் அயோத்தி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய தடைவிதித்த திமுக அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து மீண்டும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உத்தரவால் நிதி அமைச்சர் நிர்மலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3xpe2jhr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உரிமை பறிப்பு

காஞ்சிபுரத்தில் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோயில்களை தி.மு.க தவறாக பயன்படுத்துகிறது. கோயில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு ஹிந்துவுக்கு உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். ஹிந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் தி.மு.க., அரசு பக்தர்களை வஞ்சிக்கிறது.ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில் தி.மு.க., தலையிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எல்.இ.டி திரை அகற்றம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும், ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை காண எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண, பக்தர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது போலீசார் எச்சரிக்கையால், எல்.இ.டி.,திரை அகற்றப்பட்டது.

கோர்ட் உத்தரவு

ராமர் கோயில் திறப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசாரின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றமும், நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து, அகற்றப்பட்ட எல்இடி திரை மீண்டும் அமைக்கப்பட்டு, நேரலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஒளிபரப்பு

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா, நீலகிரி குன்னூர் மேல் உபதலை ராமர் கோவில் மற்றும் பந்தலூர் அருகே சிவன் கோவிலில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் ராம நாமம் பாடி பக்தியுடன் பங்கேற்றனர்.

வயிற்றிலேயே அடிக்கிறது

முன்னதாக அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான எல்.இ.டி திரை அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. செங்கல்பட்டு அருகே 200 வீடுகள் கொண்ட கருநிலம் என்ற சிறிய கிராமத்தில் அயோத்தி நிகழ்ச்சியைக் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோயில் பகுதியிலும் எல்.இ.டி. கட்ட அனுமதி தரப்படவில்லை. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலும் போலீசார் எச்சரிக்கையால் எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விரோத தி.மு.க. அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 400- க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தி.மு.க. அரசு எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

venugopal s
ஜன 23, 2024 07:35

தமிழக சங்கிகள் சாகும் வரை இப்படியே புலம்பிக் கொண்டே இருந்து போய்ச் சேர வேண்டியது தான்!


sankaranarayanan
ஜன 23, 2024 00:12

வரும் பாராளுமன்ற தேர்தலில் இவைகளை மக்களுக்கு விவரமாக கூறி இவர்கள் கதையை கந்தலாக்குங்கள் இதற்கு முதலில் மான நஷ்ட்ட ஈடு தொகை வாங்க நீதி மன்றங்களில் வழக்கை போடுங்களப்பா அடிமேல் அடி வைத்தால்தான் அம்மியில் நகரும் அன்பர்கள் அதை இவர்களிட காண்பியுங்கள் நிமிரவிடாமல் இனி ஆங்காங்கே சமயம் வரும்போது தாக்கினால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்


vbs manian
ஜன 22, 2024 16:47

திருச்செந்தூர் சபரிமலை திருவண்ணாமலை மற்றும் கும்பாபிஷேக நிகஸ்ச்சிகள் நேரலை .ஏன் அயோத்திக்கு மட்டும் தடை. காவல் துறை பெரியோர்களே உங்கள் மனசாட்சியை கொஞ்சம் கேளுங்கள்.


வெகுளி
ஜன 22, 2024 16:33

திராவிட அடக்குமுறையை வீழ்த்திய ராமனுக்கு நன்றி.... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறசீற்றம் தமிழக ஹிந்துக்களின் அச்ச உணர்வை போக்கி புது நம்பிக்கை அளிக்கிறது...


T.sthivinayagam
ஜன 22, 2024 14:57

நன்றி அம்மையாரே வட மாநில கலாச்சார கும்பாபிஷெக நிகழ்வை அனைவரும் பார்க்கும் படி செய்ததர்க்கு


krishnamurthy
ஜன 22, 2024 14:27

சபாஷ் ஹிந்துஸ். தேங்க்ஸ் டு ஹை கோர்ட்


Indhuindian
ஜன 22, 2024 14:13

முதுகெலும்பு உள்ள எந்த அதிகாரியாவது விழா கூடாது என்று வாய் மொழியாக உத்தரவு வந்தபோது அதை கொஞ்சம் ஏஷுதி கையெஷுத்து போட்டு குடுங்கன்னு. என்ன ஆகவும் மிஞ்சி மிஞ்சி போனா தண்ணி இல்லா காட்டுக்கு போகணும் அந்த மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்தா அரசு தண்ணி இல்லா காட்டைதான் தேடணும் அதிகாரிகளே விஷத்தஸுங்கல்.


தமிழ்வேள்
ஜன 22, 2024 17:47

அப்படி எழுதி கையெழுத்த்து மட்டுமல்ல , அரசு ரப்பர் ஸ்டாம்ப் கூட போட்டுக்கொடுத்த வினை அல்லது திமிர்தான் , தற்போது ஆதாரத்தோடு சுப்ரீம் கோர்ட் , ஹை கோர்ட்களில் ஒரே நேரத்தில் கொட்டு வாங்கியது ...[வேறு எந்த மாநில அரசும் இது போல ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்றங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இடி வாங்கியது கிடையாது ...இந்த அசிங்கத்திலும் விடியாத அரசுதான் முதல் போனி ]


திரு.திருராம்
ஜன 22, 2024 14:02

திருக்கயிலாயத்தில் அம்மையப்பன் திருமணம் நடந்தேறியபோது, தென்தமிழகத்தில் உலக நன்மைக்காக நின்ற அகத்திய பெருமானின் தியாகத்துக்கு இணையானது நமது நிர்மலா அவர்களின் செயல், அண்ணாமலையும் கூட, அவர்கள் நினைத்திருந்தல் அயோத்தியில் மேடையில் இருந்திருக்கலாம், யார் தடுக்கப்போகிறார்கள், எனவே ராட்சதர் கையில் அதிகாரம் இருக்கும் இன்றைய நிலையில் பக்தர்களுக்கு அரணாக நிற்கும் இவர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது


sankar
ஜன 22, 2024 16:15

மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்


sankar
ஜன 22, 2024 16:16

"ராட்சதர் கையில் அதிகாரம் இருக்கும் இன்றைய நிலையில் பக்தர்களுக்கு அரணாக நிற்கும் இவர்கள் தியாகம் போற்றுதலுக்கு உரியது"- தெளிவான கருத்து


Gopinathan S
ஜன 22, 2024 13:13

அங்கே எல்லாரும் கூடி இருக்க?


சிவா - சவுĪ
ஜன 22, 2024 13:03

தன் அழிவை தானே தேடிக் கொள்கிறது ஒரு திராவிட கட்சி


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ