உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சியினர் விட்டு கொடுக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

கூட்டணி கட்சியினர் விட்டு கொடுக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

ராமநாதபுரம்; ''கபடி என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்று தி.மு.க.,வினர், அதன் கூட்டணி கட்சியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.ராமநாதபுரம் தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதி ராமேஸ்வரம் ரோடு பிரப்பன் வலசை கடற்கரை ரூ.42 கோடியில் சர்வதேச வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: பிரப்பன்வலசை கடற்கரையில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பதற்காக 2024--25 பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பகுதி கடற்கரை என்பதால் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. பிப்., 5ல் சர்வதேச தரத்திலான வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்கும் பணி துவங்கும். இங்கு தங்கும் விடுதி, சர்ப்பிங், கயாக்கிங், ஸ்டேண்டப் பெடலிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதுவரை அலை சறுக்கு போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு வந்தது. பிரப்பன் வலசையில் அகாடமி அடுத்தாண்டு ஜனவரிக்குள் அமைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.கீழக்கரையில் நடந்த கபடி வீரர்களுக்கான ெஹல்த் இன்சூரன்ஸ் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளோம். சிறந்த கபடி வீரர்களை உருவாக்கி வரும் மாவட்டமாக ராமநாதபுரம் திகழ்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து சிறந்த கபடி வீரர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கபடி என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்று தி.மு.க.,வினர், அதன் கூட்டணி கட்சியினரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும். 2026 சட்டசபைத்தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Esan
பிப் 03, 2025 15:41

இவர்கள் ஆட்சி செய்ய கூட்டணி தேவை. ஆனால் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது. என்னே பொதுவுடைமை.


SAMANIYAN
பிப் 03, 2025 09:27

சனாதனத்தை உலகறிய செய்த மஹாபுருஷன்..உதயநிதி..இந்து மக்களின் சகிப்பு தன்மையே நீ வெளியில் தைரியமாக நடமாட காரணம் ..மானம், ரோசம் அற்ற இந்துக்கள் ஒரு நாள் அதை திரும்ப பெரும் நிலை வரும் அதுவும் உங்கள் தயவால் தான் வரும் ..அன்று சங்கு ஊதப்படும் உங்கள் கட்சிக்கு ..


Indhuindian
பிப் 03, 2025 06:27

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீ அவுல் கொண்டுவா நான் உமி கொண்டு வரேன் ரெண்டுதாயும் கலந்து வூதி வூதி தின்னலாம் அம்புடுதேன்


S.kausalya
பிப் 03, 2025 04:40

அதாவது இவர்கள் பல்லக்கில் உட்காருவதற்கு ,தொண்டர்கள் மட்டும் பல்லக்கு தூக்கினால் போதாது . கூட்டணி கட்சியினரும் தூக்க வேண்டும இவர்களின் ஊழல், கொள்ளை, போன்றவைகளுக்கு ஆதரவு தர வேண்டும். தங்கள் கட்சியின் கொள்கைகளை, மாண்பை மறந்து இவர்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். கம்ம்யூனிஸ்டு கட்சியினரும் Visika கட்சியினரும் இதை அப்படியே பின் தொடருங்கள்..சீக்கிரம் உங்கள் கட்சி திமுகவின் உள்ளே மறைந்து விடும். அரசியல் தகுதியே இல்லாமல் பேசும் இவனெல்லாம் ஒரு மனிதனே இல்லை


நிக்கோல்தாம்சன்
பிப் 03, 2025 03:25

கூட்டணி கட்சியினர் இல்லையென்றால் உங்க கட்சி ஆட்சியில் இருந்திருக்கவே முடியாது , நீங்களும் அட்டை மாதிரி துணையாகியிருக்க முடியாது இளவரசே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை