மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
3 hour(s) ago | 2
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
3 hour(s) ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
3 hour(s) ago
ராமேஸ்வரம்:தை அமாவாசையை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர்.தை அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின்னர் அக்கடலில் புனித நீராடினர்.இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசித்தனர்.காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனும், தங்க கருட வாகனத்தில் ராமர்,சீதையும் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாராதனை நடந்ததும், பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும் உற்ஸவம் நடந்தது.
3 hour(s) ago | 2
3 hour(s) ago
3 hour(s) ago