உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மாற்றி யோசிக்க தன்கர் வேண்டுகோள்

தேசிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மாற்றி யோசிக்க தன்கர் வேண்டுகோள்

புதுச்சேரி:''தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார்.புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி, நேற்று புதுச்சேரி பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:நீண்ட இடைவெளிக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட நம் தேசிய கல்விக்கொள்கை - 2020, தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது இந்தியாவின் கல்வி பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணம். இது பல்கலைக்கழகங்களை பன்முகத்தன்மை, விமர்சன சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை வளர்க்க அழைக்கிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உறுதிப்பாடு

தேசிய கல்விக்கொள்கை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நம் இளைஞர்கள் தங்கள் திறமையையும், ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.பிரிவினைவாதமும், மொழி கற்றலும் வேறுபட்ட துருவங்கள்.பாதுகாப்பு துறையில், இந்தியாவின் நிலைப்பாடு வியத்தகு முறையில் முன்னேறியுள்ளது. வான்வழி தாக்குதல்கள் முதல் சமீபத்திய ஆப்பரேஷன் சிந்துார் வரை, இந்திய உறுதிப்பாடு, தெளிவு மற்றும் தைரியத்தை காட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டு திறன்களை பயன்படுத்தியதே காரணம். ஒரு நாடு தன் மக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆத்ம நிர்பந்தத்தின் வாயிலாக அதை செய்ய வேண்டும். நம் நாடு அதைத்தான் துல்லியமாக செய்துள்ளது.சட்டவிரோத இடம் பெயர்வு, வெடிகுண்டு கலாசாரம் போன்றவை ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது எல்லைகளை மீறுவது மட்டுமின்றி, இறையாண்மையை அழிப்பது, சமூக ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைப்பதாக உள்ளது.

பெருமைப்படுத்துங்கள்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை அடையாளம் காண, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு இந்த பிரச்னையின் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது. 1951 மற்றும் 2011க்கு இடையில், இப்பகுதியில் பழங்குடி மக்கள் தொகை கடுமையாக குறைந்தது. அதே நேரத்தில் சிறுபான்மையினரின் பங்கு இரட்டிப்பானது. இது போர்க்குணம், தீவிரவாதம், சமூக அமைதியின்மையை இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகிறது. மக்கள் விரோத சக்திகளின் ஊடுருவல் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது.இளைஞர்கள் தங்கள் சவால்களை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அம்பேத்கரின் சிந்தனையாக அவர் கூறியபடி, இந்தியர்களாகிய நம் விசுவாசம் சிறிதளவும் பாதிக்கப்படக்கூடாது. மதம், கலாசாரம், மொழியை தாண்டி நாம் முதலிலும், கடைசியிலும் இந்தியர்கள் என்பதை மனதில் கொண்டு தைரியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் முன்னேறுங்கள். நாட்டை பெருமைப்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Stec
ஜூன் 19, 2025 20:16

Please ask our leader to learn another language, so he can communicate with other world leaders confidently before asking country to learn 3 languages. Leader should set an example.


Pascal
ஜூன் 19, 2025 08:16

மாத்தி யோசித்து பார்த்தாச்சு சார். எங்களுக்கு இரு மொழியே போதும். ஒருவேளை பானிபூரி விக்கிற நிலைமை ஏற்பட்டால் ஹிந்தி கத்துக்குறோம். ஆனால் தமிழர்களுக்கு அந்நிலை ஏற்படவே படாது.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:31

கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. தேசீய கொள்கை சார்ந்த முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் பள்ளி மாறிச் சென்றாலும் மாணவர்களுக்கு தடங்கல் ஏற்படுத்தாத பாடத்திட்டம் தேவை. ஒழுக்கம், மென்திறன் மேம்பாடு கற்றுத்தரும் புதிய கல்விக்கொள்கையை தாமதமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவுட் ஆஃப் கன்ட்ரோல் கும்பலை ஒடுக்க வேண்டும்


J.Isaac
ஜூன் 18, 2025 11:09

மறைமுகமாக ஹிந்தியை திணிப்பது தான் முக்கிய காரணம். ஏனென்றால் தமிழ் நாடு, கர்நாடகாவில் கோடிக்கணக்கான வடநாட்டவர் குடியேறிவிட்டார்கள். ஆனால் கேரளாவில் இது சாத்தியமாகவில்லை.அவர்களுடைய வாக்குகளை பெற இது ஒரு தந்திரம். பிராந்திய மொழிகளை கற்க அவர்கள் விரும்பவில்லை. மூன்று வயதில் மூன்று மொழியை திணிப்பது சராசரி குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இடைநிற்றலை உருவாக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 15:01

வடஇந்திய உழைப்பாளர்கள் வீட்டுப் பிள்ளைகள் இங்கு அரசுப் பள்ளிகளில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள். உங்கள் கற்பனைகளை இங்கு அள்ளிவிட வேண்டாமே.


J.Isaac
ஜூன் 18, 2025 10:58

முதலில் மும்மொழியாகிய ஒழுக்கம், உண்மை, நேர்மையை சிறு வயதிலேயே கற்று கொடுக்க வேண்டும். வடநாட்டவர் கேரளாவில் தொழில் பண்ண முடிகிறதா ?


pmsamy
ஜூன் 18, 2025 07:33

தன்கர் அவருக்கு சுய அறிவு சுய சிந்தனை சமூக நீதி சமூக அறிவு என்பது அறவே இல்லை என்பதை மறைமுகமாக சொல்றார்


vivek
ஜூன் 18, 2025 07:57

நீயும் அரைவேக்காடு திராவிட சொம்புதானே


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:36

சுயசிந்தனை இருந்தால் துண்டு சீட்டை நம்ப வேண்டியிருக்காதே


GMM
ஜூன் 18, 2025 06:51

தேசிய கொள்கை வகுப்பது அனைத்து மாநில பிரதிநிதிகள். கொள்கை சட்டம் ஆனபின், அனைத்து மாநிலங்களும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் சட்ட விரோதமாக வாதிட்டு அரசியல் சாசன குழப்பத்தை சில கட்சி வழக்கறிஞர் உருவாக்கி விட்டனர். மாநிலம் தனி கொள்கை வகுப்பது ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல. கூடுதல் தேவையை இணைக்கலாம். 3 மொழி கொள்கை என்றால் 4 மொழி. தேசிய கொள்கை விரோத 2 மொழி கொள்கை அரசியல் சாசன எதிர் கொள்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை