உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் பிப்.28ல் சென்னை வருகை

தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் பிப்.28ல் சென்னை வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்திற்கு புதிய விதிகள் உருவாக்கம், மும்மொழி கொள்கையில் கண்டிப்பு என, தமிழக அரசியலில் திடீர் சூட்டை கிளப்பியுள்ள, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்., 28ல் சென்னை, ஐ.ஐ.டி., வரவுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:

தேசிய கல்வி தரவரிசையில், முதல், 50 இடங்களைப் பிடித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்பாளர்களை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளாக, 'இன்வென்டிவ் - 2025' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்த நிகழ்ச்சி பிப்., 28ம் தேதியும், மார்ச் 1ம் தேதியும் நடக்க உள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளார்.இதில் பங்கேற்க 262 கண்டுபிடிப்பாளர்கள் விண்ணப்பித்த நிலையில், 186 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து, சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., வி.ஐ.டி., - எஸ்.ஆர்.எம்., மற்றும் அமிர்தா உள்ளிட்ட நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெறுகின்றன. நாட்டின், 250 முன்னணி நிறுவனங்களும், 100க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் சர்ந்த, 19 கண்டுபிடிப்புகளும் இடம் பெறுகின்றன.இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும். நிகழ்ச்சியில், நாட்டின் மிக முக்கிய தொழில் துறையினரும் கல்வியாளர்களும் பங்கேற்பதால், பொது மக்கள், மாணவர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

morlot
பிப் 21, 2025 17:51

IIT director who drinks komyam,cows urine is a friend of governor Ravi. Thats why he is organizing this conference as a sign of provocation, may be an idea og annamalie.


naranam
பிப் 21, 2025 16:39

கோ பேக் காட்டுவானுங்களே இந்த மரமண்டைகள்!


venugopal s
பிப் 21, 2025 13:07

எல்லாம் சரி தான், ஆனால் கடைசி வரியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்னும் போதே உங்கள் பயம் புரிந்து விட்டது!


அப்பாவி
பிப் 21, 2025 12:36

#கோபேக் ப்ர்தான்


K Subramanian
பிப் 21, 2025 12:12

இவர் மேல எந்த தப்பும் இல்லை. கடமையை செய்கின்றார்


ராமகிருஷ்ணன்
பிப் 21, 2025 11:10

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது செய்தவற்றை இப்பவே செய்யுமா. மனித சங்கிலி, கருப்பு சட்டை, போன்ற அதி பயங்கர எதிர்ப்புகளை காண்பிக்கலாமே.


Barakat Ali
பிப் 21, 2025 09:38

அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு தேவை ....


Srinivasan Krishnamoorthy
பிப் 21, 2025 08:56

Vekai illathavargallukku ....


Balaa
பிப் 21, 2025 07:37

டேய் அப்ரசன்டுகளா, அந்த கருப்பு கொடிய தூசி தட்டி ரெடியா வைங்க....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை