உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவு

ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவு

கோவை: கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று வீடியோ வெளியானது. இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.இந்நிலையில், இந்த வீடியோவை போலீஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திக்குமார், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
மார் 30, 2024 06:01

ஆரத்தித்தட்டில் பணம் போடுவது நம் கலாச்சாரம் அதை தேர்தலுக்காக தவிர்க்க முடியாது ஓட்டுக்கு பணமும் மசூதிகளிலும் சர்ச்களிலும் தீம்காவுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்வதெல்லாம் பிரச்சினையில்லை - ஆனால் ஆரத்தித்தட்டில் பணம் போட்டால் பிரச்சினை தமிழனுக்கு என்று திராவிட லேபல் ஒட்டினார்களோ அன்றே அழிவின் ஆரம்பம்


kulandai kannan
மார் 29, 2024 23:34

2023ல் எடுக்கப்பட்ட வீடியோ


K.Ramakrishnan
மார் 29, 2024 22:26

தேர்தல் கமிஷன் விசாரணை எப்படி இருக்கும் என்று தெரியாதா? இவர் வேட்பு மனுவில் பிழை இருந்தும் தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டாரே பிறகு எப்படி இந்த கமிஷன் மீது நம்பிக்கை வரும்? இதற்கு தேர்தலே நடத்தாமல் நாங்கள் தான் இன்னும் பத்தாண்டுக்கு இருப்போம் என்று அறிவித்துவிட்டுப் போக வேண்டியது தானே


ஆரூர் ரங்
மார் 29, 2024 22:05

மிகப்பழைய வீடியோ போலத்தான் தெரியுது.


பேசும் தமிழன்
மார் 29, 2024 20:48

திருட்டு திராவிட மாடல் ஆட்களுக்கு பேதியாகி போய் கிடக்கிறார்கள்.... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.... அண்ணாமலை அவர்கள் எதை செய்தாலும் அதில் குற்றம் சொல்லி கொண்டு திரிகிறார்கள்...... இதிலிருந்து என்ன தெரிகிறது.... அவர்களின் தோல்வி பயம் அவர்களை அப்படி செய்ய வைக்கிறது.


தமிழ்வேள்
மார் 29, 2024 20:20

நாளை பப்ளிக் டாய்லெட் பயன்படுத்த ஐந்து ரூபாய் கொடுத்தாலும் அதைக்கூட விசாரணை நடத்த வேண்டும் என கேட்பார்கள் போல


தமிழ்வேள்
மார் 29, 2024 20:19

திமுகவுக்கு பயபீதி மிஞ்சி பேதியாகி விட்டது


சண்முகம்
மார் 29, 2024 20:18

ஆரத்திக்கு பணம் போடுவது தமிழ் நாட்டில் பரவலான பழக்கம். இதில் விசாரணை ஏன்?


Karthikeyan
மார் 29, 2024 19:52

Old Video Current wearing threads and watches are different


பேசும் தமிழன்
மார் 29, 2024 19:39

வீடு வீடாக அண்ணாமலை அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்...... தமிழக மக்களை காக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... தமிழர்கள் திராவிட மாயைக்குள் இருந்து வெளியே வர வேண்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை