உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு... உதயநிதி சொன்னதை செய்தாரா முதல்வர்; பா.ஜ., கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு... உதயநிதி சொன்னதை செய்தாரா முதல்வர்; பா.ஜ., கேள்வி

சென்னை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (நவ.,5) இரண்டு நாள் பயணமாக கோவை வந்தார். அவர் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பா.ஜ.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'திராவிட மாடல்' அரசு என்று தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் 'தமிழை' புறக்கணிப்பது வியப்பல்ல என்ற போதிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை உதாசீனப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை 'தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது' என்று கடந்த மாதம் 21ம் தேதி உதயநிதி கூறியதற்கு அர்த்தம் இது தானோ? அதனால் தான் பாடாமல் விட்டு விட்டீர்களா ஸ்டாலின் அவர்களே?தி.மு.க., என்றைக்குமே தமிழர் விரோத கட்சி தான் என்பதை இந்நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. என் இனிய தமிழை, மங்கா புகழ் கொண்ட தமிழை தி.மு.க., போற்றாதிருப்பதே சிறப்பு, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

God yes Godyes
நவ 08, 2024 16:49

வாக்கு கேட்கும் போது தமிழ் மீது மரியாதை.பேனா அதிகமாக தேயும்.அந்த வேலை முடிந்தவுடன் பேனா கையில் இருக்காது.அதில் மையும் இருக்காது.


என்றும் இந்தியன்
நவ 07, 2024 17:14

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு??? சரிதானே??? அது திருட்டு திராவிட கட்சி ஆகவே அவர்களுக்கு திராவிடத்தாய் வாழ்த்து தான் சரியானது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவே அல்ல


Sridhar
நவ 07, 2024 14:40

இது ஏன் வெறும் ராமதாஸ்/நாராயணன் மட்டும் சொல்லும் விஷயமாக இருக்கிறது? தமிழகமே கொந்தளித்து எழவேண்டாமா? என்னதான் தெலுங்கு ஆளாக இருந்தாலும், தமிழகத்தில் முதல்மந்திரியாக இருந்துகொண்டு இப்படி தமிழை அவமரியாதை செய்வதை சீமானோ தவக்களை கட்சிக்காரர்களோ பாஜகவில் இருக்கும் மற்ற தலைவர்களோ ஏன் சிலிர்த்து எழுந்து கண்டிக்கவில்லை?


Dharmavaan
நவ 07, 2024 16:22

எல்லாம் திமுக கைக்கூலிகள் கொத்தடிமைகள் விலைமாது ஊடகங்கள் எப்படி இருக்கும்.இப்போதுஎல்லாம் வலசுருட்டி மூலையில் உறங்குகின்றன


Smba
நவ 07, 2024 13:28

ஆகர வேலய பாரு


V S Narayanan
நவ 07, 2024 12:29

Donkeys, Monkeys Koottam can do like this much of atrocities only.


M S RAGHUNATHAN
நவ 07, 2024 12:12

தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு தமிழில் இருந்தது பிறந்தது என்பதால் தெலுங்கர்கள் ஆன நாங்கள் இந்த வாழ்த்தை புறக்கணிக்கிறோம் என்று துணை சொன்னாலும் சொல்வார்.


sugumar s
நவ 07, 2024 12:04

யாருக்கும் தமிழ் தாய் வாழ்த்து சரியாய் தெரியவில்லை. தப்பா பாடினால் எல்லோரும் கவனிச்சு சமூக வலையில் விமர்சனம் பண்ரறாங்க . எதுக்கு வம்புன்னுதான் புறக்கணிச்சுட்டாங்க


Sankaran Kumar
நவ 08, 2024 19:30

Then what is necessary to criticize Governor belonging to other states in an shabby manner as we ourselves dont know Tamizhl thai vzhalthu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை