உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்

டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை:திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றப் பட்டார்.உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே, 42. தமிழக காவல் துறையின், 2011ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், புதுக்கோட்டை எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக பணியமர்த்தப்பட்டார். இவரை, மத்திய அரசின் இளைஞர் விவகாரத் துறை இயக்குநராக நியமனம் செய்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இப்பொறுப்பில், ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பணிபுரிவார் என, தகவல் வெளியாகி உள்ளது. இவரது கணவர் வருண்குமார், திருச்சி டி.ஐ.ஜி.,யாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !