உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிட்டல் பயிர் சர்வே திட்டப் பணி சொதப்பல்! இறுதி கட்டத்தில் மாணவர்களிடம் திணிப்பு

டிஜிட்டல் பயிர் சர்வே திட்டப் பணி சொதப்பல்! இறுதி கட்டத்தில் மாணவர்களிடம் திணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் வகையிலும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகள் நடந்து வருகின்றன.மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், 2023 ஆக., மாதம், டிஜிட்டல் பயிர் சர்வே துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 2023 செப்., மாதம் வருவாய் துறையின் கீழ், வி.ஏ.ஓ.,க்களுக்கு., வேளாண் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆனால், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில், இப்பணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2023 செப்., மாதம் துவக்கப்படவேண்டிய சர்வே, தமிழகத்தில் மேற்கொள்ளப்படாமல் முடங்கியது. 2025 மார்ச் மாதம் இத்தகவல்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், இறுதி கட்டத்தில் வேறு வழியின்றி தற்போது, வேளாண் பல்கலை மாணவர்களை பயன்படுத்தி சர்வே பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், தனியார் உட்பட அனைத்து கல்லுாரிகளில் படிக்கும் 20,000 மாணவர்கள், ஆசிரியர்கள் இதில் கட்டாயம் பங்கேற்க பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நடைபெறவிருந்த தேர்வுகள், கல்விச் சுற்றுலா அனைத்தும் தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் கிராமங்கள் வாரியாக சர்வே பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. வேளாண் பல்கலை ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ரவீந்தரனிடம் கேட்டபோது, ''இது ஒரு சின்ன பயிற்சி மட்டுமே. இதன், முன்கூட்டி அனுபவமாக, பாடங்களுடன் இணைந்து தான் சர்வே பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, விவசாயிகளின் வாழ்கை முறையை அறிந்து கொள்ள முடியும்.''மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசின், 3 டிஜிட்டல் வேளாண் திட்டத்தில் சர்வே நடக்கிறது.''அனைத்து மாநிலங்களிலும் இப்பணிகள் நடக்கின்றன. பிற மாநிலங்களில் கொஞ்சம் முன்பு பணிகளை துவக்கி முடித்து விட்டனர்; நாம் தற்போது துவக்கியுள்ளோம். மாநில அரசுடன் இணைந்து தான் இதை மேற்கொள்கிறோம்,'' என்றார்.

பயிற்சிகள் இல்லை

இதுகுறித்து, பல்கலை பேராசிரியர் சிலரிடம் கேட்டபோது, 'மாணவர்கள், 22 நாட்கள் சர்வே பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 50 முதல் 60 கேள்விகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சர்வே செய்வதற்கான பயிற்சிகள் ஏதும் வழங்கப்படவில்லை.'மாணவர்களுக்கு சிறந்த அனுபவம்' என, பல்கலை நிர்வாகம் கூறுவதை ஏற்க இயலாது. தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது சரியல்ல. பயிற்சி இல்லாத, விபரம் அறியாத மாணவர்களால் கடமைக்கு திரட்டப்படும் தகவல் எந்த வகையில் உதவும். மேலும், மழை காலத்தில் துல்லியமாக எந்த தகவல்களையும் திரட்ட இயலாது. மழைக்காலம், போக்குவரத்து இன்மை, வன விலங்கு என பல அச்சுறுத்தல்கள் மாணவர்களுக்கு உள்ளன. மாணவர்களுக்கு, 50 - 60 கி.மீ., தொலைவில் சர்வே செய்வதற்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; எளிதில் முடிக்க கூடிய பணி இதுவல்ல' என்றனர்.

முற்றிலும் தவறானது

கற்பகம் பல்கலை வேந்தர் மற்றும் முன்னாள் வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமியிடம் கேட்டபோது, ''சர்வே பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கல்லுாரி முதல்வர்கள் ஏன் ஒப்புதல் அளித்தனர்; இப்பணிகள் சார்ந்து, மாணவர்களுக்கு என்ன தெரியும். ''குறிப்பாக, 75 முதல் 80 சதவீதம் பெண்கள் படிக்கின்றனர். இவர்களை கிராமத்திற்கு அனுப்புவதால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். மேலும், கற்றல் செயல்பாடுகளை ஒத்தி வைத்து, மாணவர்களை பல்கலை நிர்வாகம் இப்பணிகளில் ஈடுபடுத்துவது முற்றிலும் தவறானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Makkal en pakkam
நவ 08, 2024 20:33

டிஜிட்டல் வேளாண்மை கணக்கெடுப்பு பணி வேளாண் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது என்பது இரண்டு பலன் கொடுக்கும் ஒன்று வேளாண் மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த புரிதல்கள் ஏற்படும் வேளாண்மை செய்யும் விவசாயிகளின் வலி புரியும் அதுமட்டுமின்றி ஓட்டலுக்கு செல்லும் போது அந்த உணவை வீண் செய்ய மனம் வராது மற்றொன்று ராம நிர்வாக அலுவலருக்கு பணி சுமை குறையும் மன அழுத்தம் குறையும்


V GOPALAN
நவ 07, 2024 20:25

திராவிட மாடல் அரசு எதற்கும் லாயக்கு இல்லை என்பதே உன்மை பெற்ற சொல்கிறார் தமிழ்நாடு ஒரு ரோல் மாடல் நம்பர் ஒன்னு என்று தம்பட்டம் வேறு . படிப்பஅறிவில் பின் தங்கிய எல்லா மாநிலங்களும் இந்த பணியை முடித்து விட்டன என்பது வெட்க கேடு ஆந்திராவில் 2010 ம் ஆண்டே ஈ ஸேவை வெறிகரமாக செயல்படுத்தப்பட்டது நம் தமிழ்நாட்டோற்க்கு 2021 ல் தான் ஓரளவு முன்னேற்றம் கண்டோம்


Saai Sundharamurthy AVK
நவ 07, 2024 16:23

டிஜிட்டல் சர்வே என்பது பொறியியல் சம்பந்தப்பட்டது. சிவில் என்ஜினீரிங் படிப்பவர்களுக்கு Digital Land Surveying ஒரு பாடமாகவே சொல்லி தரப்பு படுகிறது. இதில் வேளாண் மாணவர்களை எப்படி பயன்படுத்த முடியும் ???புள்ளி விபரங்கள் எடுக்க வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


அப்பாவி
நவ 07, 2024 07:07

தமிழகம் முழுவதுமே தத்திகள். இதுல வி.ஏ.ஓ க்கள் தனியா அறிவோட வந்துறப் போறாங்களா?


சமூக நல விருப்பி
நவ 07, 2024 06:24

மாணவிகளை தொலை தூரத்துக்கு அனுப்பி அவர்கள் வாழ்வுடன் விளையாட பார்க்கிறது திமுக மாடல் அரசு. ஏற்கனவே டாஸ்மாக் மற்றும் போதை மருந்துகளால் தமிழக மக்கள் வாழ்க்கை இழந்து நிற்கறார்கள். அனைத்துக்கும் திமுக அரசு தான் காரணம். திறமை இல்லா வீனா போன அரசு.


Kasimani Baskaran
நவ 07, 2024 05:32

வி ஏ ஓ க்களுக்கு வேலை செய்வது என்றால் பிடிக்காது. ஆகவே அதை மாணவர்கள், பல்கலைக்கழகம் என்று மாறி மாறி சொதப்புகிறார்கள். நல்ல திட்டமாகவே இருந்தாலும் பணம் பார்ப்பதிலேயே முழு கவனமாக இருந்து கொண்டு வேலை செய்ய பயப்படும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஆணி.


Ponnusamy
நவ 17, 2024 07:00

உண்மை


புதிய வீடியோ