மேலும் செய்திகள்
ஆதார் அப்டேட் செய்ய இனி கூடுதல் செலவாகும்
03-Oct-2025
சென்னை: 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்த, மூன்றாவது வங்கியாக, பாரத ஸ்டேட் வங்கியை, மின் வாரியம் நியமிக்க உள்ளது. மின் கட்டண வசூல் மையம் மற்றும் அரசு 'இ - சேவை' மையம் வாயிலாக, பணம், காசோலை, வரைவோலையில் மின் கட்டணத்தை செலுத்தலாம். மேலும், மின் வாரிய இணையதளம், மொபைல் போன் செயலி மற்றும் யு.பி.ஐ.,யில், 'கூகுள் பே, பே.டி.எம்., பீம், போன்பே' போன்ற மொபைல் போன் செயலிகள் வாயிலாகவும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம். இதனால் மின் வாரியத்திற்கு, டிஜிட்டல் வாயிலான மின் கட்டணம் வசூல் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2020 - 21ல், 4.39 கோடி பேரிடம், 18,740 கோடி ரூபாய் வசூலான நிலையில், 2024 - 25ல், 9.56 கோடி பேரிடம், 58,285 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மொத்த மின் கட்டணம் வசூலில், 85 சதவீதம் டிஜிட்டல் முறையிலும்; மீதம் மின் கட்டண மையங்களிலும் வசூலாகிறது. டிஜிட்டல் முறையிலான வசூலை, 100 சதவீதமாக அதிகரிக்கும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் போது, மின் வாரியம் கணக்கு வைத்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி வாயிலாக வசூல் தொகை வருகிறது. தற்போது, மூன்றாவது வங்கியாக, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி நியமிக்கப்பட உள்ளது.
03-Oct-2025