தினகரன் குக்கர் வெடித்து விட்டது
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். டீசல் பஸ்களால் உருவாகும் காற்று மாசுகளை தவிர்ப்பதற்கு, ஒரு வாய்ப்பாக இந்த மின்சார பஸ்கள் இருக்கும். பஸ்கள் விலை கூடுதலாக இருந்தாலும், பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனின் குக்கர், ஏற்கனவே வெடித்து விட்டது. அவரெல்லாம் தமிழக அரசு குறித்து குறை கூற எதுவுமே இல்லை. இருந்தாலும், விமர்சனம் என்ற பெயரில் வெற்று கதைகளை அளந்து விடுகிறார். சிவசங்கர், தமிழக அமைச்சர்