பொது அறிவு களஞ்சியமாக தினமலர் - பட்டம் இதழ்
'தினமலர்' பட்டம் இதழ் நடத்திய வினா வினா போட்டியில் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. பட்டம் இதழில் பொது அறிவு, அறிவியல், நடப்பு நிகழ்வுகள் உட்பட பல்வேறு அரிய தகவல்கள் இடம் பெறுகின்றன. கலெக்டர், சிறந்த ஆலோசனைகளை வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை தெரிந்து கொண்டேன். இறுதி போட்டியில் சரியான பதில் அளிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. -ஷிப்ரா கிரேசில்லா, பிளஸ் 1 ----- வினாடி வினா போட்டியில் பங்கேற்க முதலில் அச்சமாக இருந்தது. இருப்பினும் தைரியத்துடன் பங்கேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கூறி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பொது அறிவு பெட்டகமாக பட்டம் இதழ் விளங்கி வருகிறது. -நந்தினி, பிளஸ் 2 -- 'தினமலர்' நாளிதழ் கடந்தாண்டு நடத்திய பட்டம் வினாடி வினா போட்டியில் பங்கேற்று, இரண்டாமிடம் பிடித்தேன். பட்டம் இதழ் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. பள்ளி முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு 'தினமலர்-பட்டம்' இதழ் வாங்கி படித்தேன். பொது அறிவு சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். 'தினமலர்' நாளிதழிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முஹமத் உமர், பிளஸ் 2 --