உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை தொகுதியில் கடைசி நேரத்தில் இப்படியொரு மாற்றமா? இன்று காலை 9 மணிக்கு தினமலர் மெகா சர்வே ரிசல்ட்

அண்ணாமலை தொகுதியில் கடைசி நேரத்தில் இப்படியொரு மாற்றமா? இன்று காலை 9 மணிக்கு தினமலர் மெகா சர்வே ரிசல்ட்

ஐபிஎஸ் அதிகாரி என்ற உயர் பொறுப்பில் இருந்து விலகி, மக்கள் சேவை செய்ய பா.ஜ.,வில் இணைந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக உருவெடுத்து, கட்சியை மேன்மேலும் வளர்த்து வருகிறார். பா.ஜ., கட்சியை அதிகளவு இளைஞர்களிடம் கொண்டு சென்ற இவர், அரசியல் மாற்றத்தை நிச்சயம் அளிப்பார் என மக்கள் எதிர்நோக்குகின்றனர். முதல் முறையாக அவர் தலைமையில் லோக்சபா தேர்தலை அதுவும் அதிமுக கூட்டணி இல்லாமல், தனியாக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை லோக்சபா தொகுதியில் களமிறங்கியுள்ள அண்ணாமலைக்கு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆமோக ஆதரவு இருந்து வருகிறது. அவரை எதிர்த்து திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுவதால், அனைவரின் பார்வையும் கோவை தொகுதி பக்கமே திரும்பியுள்ளது. அப்படியிருக்கையில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றிப்பெறுவாரா என்பது குறித்து தினமலர் மெகா சர்வே முடிவுகள் தெரியப்படுத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஐபி வேட்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், ஏ.சி.சண்முகம், எல்.முருகன், டிடிவி தினகரன், தயாநிதி ஆகியோர் வெற்றிப்பெறுவார்களா? என்பதையும் துல்லியமாக தினமலர் மெகா சர்வே தெரியப்படுத்த உள்ளது.

தேர்தல் சர்வே முடிவுகள் ஐ பேப்பரில் பார்க்கலாம்

ipaper.dinamalar.com/detail.php?id=16399&c=Chennai&d=16-Apr-2024இன்று ( ஏப்.16) வெளியான 15 தொகுதிகள் விவரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்specials.dinamalar.com/therthalkalam/?id=2இன்றைய முடிவுகள் குறித்த தினமலர் டி.வி., சிறப்பு வீடியோ அலசல் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் www.youtube.com/watch?v=S1BGP5wT2oMஅண்மை காலத்தில், தமிழகம் இப்படி ஒரு தேர்தலை பார்க்கவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்ற நிலை மாறி, பல தொகுதிகளில் சுவாரசியமான மும்முனை போட்டி நிலவுகிறது. மக்கள் இதை எப்படி பார்க்கின்றனர்? இந்த மாற்றத்தை வரவேற்கின்றனரா? உள்ளிட்ட கேள்விகளோடு தேர்தல் அறிவிப்புக்கு பின், கருத்துக்கணிப்பு படிவங்களோடு அவர்களை சந்தித்தோம்.

எத்தனை பேரை சந்தித்தோம்? 88,000 பேரை சந்தித்தோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,- 40 லோக்சபா தொகுதிகள், 264 சட்டசபை தொகுதிகள், 3,000 பஞ்சாயத்துகள் என, நம் நாளிதழ் சார்பில் சுற்றித் திரிந்து கருத்துக்கணிப்பை நடத்தியது, ஜெ.வி.சி.ஸ்ரீராம் தலைமையிலான 'வின்னிங் எலக் ஷன்' கருத்துக்கணிப்பு குழு.இந்த பணி அவர்களுக்கும் சரி, நம் நாளிதழ் ஆசிரியர் குழுவுக்கும் சரி, மிகவும் சவாலாக அமைந்தது. தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டெடுப்புக்கும் ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான அவகாசம் மட்டுமே இருந்தது ஒரு காரணம். குறுகிய காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று, ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தாக வேண்டும்.அவர்களில் ஒவ்வொருவரிடமும், 'நீங்கள் யாருக்கு ஓட்டுப்போடப் போகிறீர்கள்?' என்ற எளிமையான கேள்வி மட்டும் கேட்க வேண்டும் என்றால், பணி எளிதாக இருந்திருக்கும். ஆனால், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலுக்கு, காரண காரியம் என்ன? அவர்களின் பதிலுக்கும், அவர்கள் சிந்தை ஓட்டத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நபரிடமும் 20 கேள்விகள் கேட்டோம். அவற்றுக்கு பொறுமையாக பதில் சொன்ன, 88,000 பேருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஏன் 88,000 பேர்?

பணியை துவங்கும் போது, 40 தொகுதிகளுக்கும் தலா, 2,000 பேர் என்ற கணக்கில், 80,000 பேரை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கள நிலவரம், எங்கள் திட்டத்தை முழுதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும், 1,500 பேரிடம் கருத்து கேட்டு வரும்போதே, கள நிலவரம் மாறத் துவங்கியது.கணிப்பு துவங்கியபோது, பரவலாக தி.மு.க., ஆதரவு நிலவிய இடங்களில், போகப்போக, பரவலான மாற்றம் ஏற்பட்டு, எதிர்தரப்பில் ஒரு கட்சிக்கு ஆதரவு என்று சூழல் மாறியது. அதாவது, அதே இடங்களில் ஒரு வாரம் முன்பிருந்த கருத்து, அடுத்த வாரம் இல்லை என்ற நிலை உருவானது. இதுதான் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது.இதனால், சில தொகுதிகளில் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சில தொகுதிகளில், கருத்துக்கணிப்பு நடந்த இடத்தை தவிர்த்து, வேறு இடங்களில் கூடுதல் நபர்களிடம் கருத்துக்கேட்டு, மாற்றத்தை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, கடைசிநேர குட்டி கருத்துக்கணிப்பு, அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டி இருந்தது.இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் கூட, சில தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடியாத நிலையில் உள்ளது. அதனால், நம் நாளிதழின் கருத்துக்கணிப்பு தான் கடைசி வாரம் வரை நடத்தப்பட்ட, ஒரே மெகா கருத்துக்கணிப்பு என, ஐயமில்லாமல் சொல்லலாம்.இப்போதும், கள நிலவரம், கடைசி இரண்டு நாட்களில், 3ல் இருந்து 5 சதவீதம் வரை மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத்தான் எங்களுக்கு தெரிகிறது. இந்த மாற்றம் யாருக்கு லாபம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், போட்டி அவ்வளவு கடுமையாக இருக்கிறது. இந்த தேர்தல், வலுவானோருக்கும், வேலை செய்வோருக்குமே வெற்றியை தரும்.நேற்று(ஏப்.,15) 15 தொகுதிகளின் நிலவரம் தெரிவிக்கப்பட்டது. இன்று, 15 தொகுதிகள், நாளை 10 தொகுதிகள் என, பிரித்துப் பிரசுரிக்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான விவாதத்தை, எங்கள் 'யு டியூப்' சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பார்க்கலாம்.இதெல்லாம் பெரும் பொருட்செலவில், மண்டை காயும் வேலையாக செய்யப்பட்டு இருந்தாலும், வாசகர்கள், இது வெறும் கணிப்பு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி கொண்டே இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிறு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த சிறு மாற்றமும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் நிலையில் தான் சில தொகுதிகள் இருக்கின்றன.சரி, கருத்துக்கணிப்பு சாராம்சமாக என்ன சொல்கிறது? இதற்கான பதில், படத்தில் சூசகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு - இணை ஆசிரியர்

நேற்று காலை 9 மணிக்கு 2வது கட்ட முடிவுகள், தினமலர் யூடியூப் பக்கம், ஐ பேப்பர் மற்றும் தேர்தல் களத்தில் வெளியானது . ipaper.dinamalar.com/detail.php?id=16398&c=Special_page&d=15-Apr-2024நேற்று ( ஏப்.16) வெளியான 15 தொகுதிகள் விவரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்specials.dinamalar.com/therthalkalam/?id=2நேற்றைய சிறப்பு அலசல் வீடியோwww.youtube.com/watch?v=S1BGP5wT2oM

நேற்று முன்தினம் வெளியான ( ஏப்.15) 15 தொகுதிகள் விவரம் பார்க்க

நேற்று வெளியான 15 தொகுதிகள் வெற்றி வாய்ப்பு என்ற முழுவிவரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.specials.dinamalar.com/therthalkalam/index

வீடியோவில் காணுங்கள்

நேற்றைய முன்தினம் 15 தொகுதிகள் குறித்த அலசல் சிறப்பு வீடியோவில் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் youtu.be/gGnnNaJydu0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

N.Arumugam
ஏப் 18, 2024 19:36

கோவையில் எடுக்கப்பட்ட சர்வேயில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் பாஜக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என நினைக்கிறேன் கோவையில் தேர்தல் களம் தேர்தலுக்கு மந்தைய நாளான இன்று வரை பாஜக மூன்றாமிடம் என்ற நிலை தான் உள்ளது வலை தளங்களில் பில்டப் கொடுப்பதில் முதலிடத்தில் உள்ளதை மறுக்க முடியாது


Selvaraj
ஏப் 17, 2024 18:27

வேட்பாளர் தரும் ரூபாயை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் திருந்தாத வரை பணம் வைத்திருப்பவர்களே ஜெயிக்க முடியும்


Indian
ஏப் 17, 2024 08:36

மக்களே தயவு செய்து உங்கள் வோட்டு நல்லவருக்கு செலுத்துங்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 17, 2024 07:38

கருத்துக்கணிப்பு என்பது சமைக்கும்போது அரிசி வெந்துவிட்டதா என்று ஒருசில அரிசியை மட்டும் சோதிப்பது போன்றது - அதாவது ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் ஆனால் அந்த சோறு எப்படி இருக்கும் என்று உண்ணும் வரை தெரியாது அது பச்சரியா, புழுங்கல் அரிசியா, பழைய அரிசியா, புதிய அரிசியா, வண்டு வந்ததா, புழு கட்டியதா, பொன்னி அரிசியா அல்லது வேறு ஜாதி அரிசியா, ரேஷன் அரிசியா, அடிப்பிடித்து விட்டதா, அரைகுறையாக அல்லது அதிகமாக குழைத்து வடித்ததா, கஞ்சி வடித்ததா இல்லையா, புகைவாடை பிடித்ததா என்று பல நிலைகளை கடந்து இறுதியாக உண்ண தகுதியாக உள்ளதா அல்லது குப்பையில் எறியப்படுமா என்று தெரியும் எனவே ஜூன் நான்கு மதியம் இரண்டு மணி வரை பொருப்பதே சரி


கண்ணன்,மேலூர்
ஏப் 17, 2024 06:39

தாமரை மலர்ந்தே தீரும்


ramamoorthy raghavan
ஏப் 17, 2024 06:34

the effort is commendable, as u said the arithmetics support the ruling dispensation, but the mood of the voter seems to be different as it show the same pattern prevailed in poll, even the said poll was for assembly From the reports it is clear that there is strong anti incumbency against the government so there is every possibility of common man opting and voting for change


Kasimani Baskaran
ஏப் 17, 2024 05:13

திராவிடக்கட்சிகளிடம் அடிபணிந்து பாஜக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற ஒரு மாயையில் தமிழகம் இருந்தது அதை மாற்றிக்காட்டி பாஜகவைப்பற்றியே திராவிடக்கட்சிகள் தினமும் பேசவைத்ததே அவரது வெற்றி நான்கு எம் எல் ஏ க்களை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு தீமகாவுக்கு தொரடர்ந்து சிக்கல்களை மட்டுமே கொண்டுவந்து சாதித்துக்காட்டியதை தீம்க்கா கூட மறக்காது தீமகாவின் அடிமை ஊடகங்களையும் மிஞ்சி அவர்களின் லீலைகளை, கூட்டை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியதெல்லாம் சாதனையை மிஞ்சியவை


Bala
ஏப் 17, 2024 02:45

திரு அண்ணாமலை அவர்கள் கோவையில் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராவது நிச்சயம் திமுகவினர் சந்தோஷப்படவேண்டாம் அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராகவும் நீடிப்பார் இல் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் தமிழக மக்களுக்கு பொற்காலம் காத்திருக்கிறது தேசியத்தையும் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் நோக்கி தமிழகம் அண்ணாமலை தலைமையில் வீறுநடை போடும்


swega
ஏப் 16, 2024 22:32

காமெடி பீஸ் தமிழிசை சதவிகிதம் கருத்து கணிப்பில் ஆனால் இதை விட தேர்தலில் குறைத்து வாங்குவார் என சொல்லுவது அதற்கு காரணமாக தமிழிசை வெள்ளத்தின் போது வேலை பார்க்க வில்லை என சப்பை கட்டுவது என்ன ரகம் சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு நீங்கள் கொடுக்கும் சதவிகிதம் திருமாவே நம்ப மாட்டார் மதுரை மக்கள் மோடியை விரும்புகிறார்கள் ஆனால் வெங்கடேசனுக்கு ஒட்டு போடுவார்கள் என்பதெல்லாம் ஓவர் கேப்டன் பாணியில்


முருகன்
ஏப் 16, 2024 21:33

தோல்வியை நினைத்து நடுக்கம் அவருக்கு இச்செய்தி உதவாது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ